கார்த்தியின் ‘தீரம் அதிகாரம் ஒன்று ‘

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு,  மற்றும் எஸ் .ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி , ரகுல் பிரீத் சிங் , போஸ் வெங்கட்  , மனோபாலா, சத்யன் நடிப்பில் , 

சதுரங்க வேட்டை புகழ்  H.வினோத் இயக்கி இருக்கும் படம தீரன் அதிகாரம் ஒன்று 

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் , இயக்குநர் H.வினோத் ,

இசை அமைப்பாளர் ஜிப்ரான்  , கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திரையிடப்பட்ட முன்னோட்டம் சிறப்பான காட்சிகளுடன் ஈர்ப்பாக இருந்தது . ராஜஸ்தான் பின்னணியில் அமைந்த காட்சிகள் சிறப்பாக இருந்தன .

சண்டைக் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் கார்த்தி . பாலைவன மணலில் புதைந்து எழுந்து ஓடி நடித்துள்ளார் . 

தமிழ்ப் பெண்ணாக நடித்துள்ளார் ராகுல் . கதிரின் கலை இயக்கம் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது . 

வினோத் சிறப்பாக காட்சிகள் அமைத்துள்ளது தெரிந்தது . வசனங்கள் ஈர்ப்பாக அமைந்து இருந்தன . 

முன்னோட்டம் மிக சிறப்பாக இருந்தது . படத்தில் ஓர் இந்திப் பாடலும் இடம் பெறுகிறது 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு “காஷ்மோரா எங்களுக்கு ஓர் வித்தியாசமான முயற்சியாக அமைந்தது .

அதை அடுத்து இன்னும் சிறப்பான கதையில் இந்தப் படத்தை வினோத் கொடுத்துள்ளார் . கார்த்தி மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தார் .

படம் நன்றாக வந்திருக்கிறது . நவம்பர் 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது ” என்றார் . 

ரகுல் பிரீத் சிங் பேசும்போது ” இந்தப் படத்தில் பக்கா தமிழ்ப் பெண்ணாக நடித்துள்ளேன் . அது மிக சந்தோஷமான அனுபவம் .

எனக்காக தமிழ்ப் பெண்ணாக நடிக்க பல போட்டோக்களை எல்லாம் கார்த்தி அனுப்பி வைத்தார் ” என்றார் 

இயக்குநர் வினோத்  தன் பேச்சில் “போலீஸ் என்றாலே தவறானவர்கள் தான் என்ற பிம்பம் மக்கள் மனதில் உள்ளது.

அதற்குக் காரணம் வாட்ஸ்ஆப்பில் வரும் போலீஸ் வீடியோக்கள்தான்.  அந்த தவறான பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

எப்படி சினிமாவில் , அரசியலில் , பத்திரிக்கையாளர்களில்  நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்களோ அதேபோல்தான்.

காவல் துறையிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருக்கிறார்கள். நிஜமான போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அதேபோல்தான் இந்த படத்திலும் இருப்பார்கள்.

தீரன் அதிகாரம் ஒன்று கமர்ஷியல் படம். எல்லோருக்கும் இப்படம் ஒரு பாடம் போல் இருக்கும். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படம்.

படத்தில் தீரன் திருமாறன் என்ற போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார். போலீசைச்சுற்றி நடக்கும் பரபரப்பான கதையாக இதை உருவாக்கியுள்ளோம்.

ஜிப்ரான் மிகச்சிறந்த பாடல்களை இந்த படத்துக்கு தந்துள்ளார் என்றார் இயக்குநர் வினோத்.

கார்த்தி  தன் பேச்சில் ” தீரன்  அதிகாரம் ஒன்று வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு பின் இந்தப் படத்தின் படபிடிப்புக்காக ராஜஸ்தான் , ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்குச் சென்றோம்.

அங்கே கடுமையான வெயில் மற்றும் குளிரை தாங்கிக்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். 

இந்த படத்தின் கதை நான் “ சிறுத்தை “ படத்துக்காக படப்பிடிப்பில் இருந்த போதே எனக்குத் தெரியும். 

நாம் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே வரும் யாரும் நம்முடைய கண்ணை பார்க்க மாட்டார்கள். அதையெல்லாம் தாண்டி ஒருவர் நம்முடைய கண்ணைப் பார்ப்பார். 

அவரிடம் சென்று பேசினால் அவர் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நம்மிடம் சொல்லுவார் என்று என்னிடம், 

“ மாற்று உலகத்தை “ பற்றி அதிகம் படித்த என்னுடைய நண்பன் ஒருவன் சொல்வான் . அதே போல் தான் இந்த படத்தின் கதை என்னை சுற்றியே வந்துக்கொண்டே இருந்தது. 

என்னடா இது …  அதே கதை மீண்டும் என்னிடம் வந்தது. நம்மை சுற்றியே இந்த கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று நான் யோசித்து ,

இந்தக் கதையில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன். நாங்கள் ராஜஸ்தானுக்கு படபிடிப்புக்கு சென்ற போது ,

அங்கே ஓரிடத்தில் இதோ நம்ம கார்த்தி வரார் என்ற தமிழ்க் குரல் கேட்டது. அவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் நம்ம சென்னை , சௌகார்பேட்டை மக்கள் தான்.

அவர்களிடம் நீங்கள் எப்படி இங்கே எப்படி என்று கேட்டபோது “ பூஜைக்காக வந்தோம் , குடும்ப நிகழ்வுக்காக வந்தோம் “ என்று பதில் அளித்தனர்.

தீரன் அதிகாரம் ஒன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது.

அனைவரும் ரசிக்கும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும். இந்த படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும் போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல் ,

காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு ஹிந்தி குத்து பாடல் , காரை வேகமாக ஒட்டி செல்லும் போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல் , மீண்டும் ஒரு அழகான மெலடி என்று, 

மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை நமக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது.

இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்த படத்தில் தந்துள்ளேன். தீரன்-ல் நான் இயக்குநரின் நடிகராக தான் இருந்துள்ளேன்.

இந்த படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *