”நான் படம் இயக்கினால் ஆர்யாதான் கதாநாயகன்” – ‘ தில்லுக்கு துட்டு 2’ சந்தானம்

சந்தானம் ஹீரோவாக நடிக்க ராம்பாலா இயக்கி வெற்றி அடைந்த படம் தில்லுக்கு துட்டு .

இப்போது படத்தின் இரண்டாம் பாகத்தை தில்லுக்கு துட்டு 2 ஆக இதே குழு உருவாக்கி இருக்கிறது .

 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக் குழு !

ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி பேசியபோது , “
சந்தானம் கூட இது எனக்கு இரண்டாவது படம்.

இயக்குநருடன் மூன்றாவது படம். இருவருடன் பணியாற்றுவது எப்போதும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். வெளிப்படையாக ஆலோசிக்கலாம். நம்முடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதேபோல, கதை எழுதுவதில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமையும். மேலும், தயாரிப்பாளர் ஒரு காட்சிக்கு தேவையானதை ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்காமல் செய்து தருவார். 

எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்ததால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இப்படம் காட்சி விருந்தாக அமையும்.” என்றார்.

 இயக்குநர் ராம்பாலா தனது பேச்சில் , “30 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். பல இடங்களில் கதை கூறியும் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன்பிறகு  சந்தானம் நாம் இருவரும் சேர்ந்து படம் எடுக்கலாம் என்று கூறினார்.

அது தான் ‘தில்லுக்கு துட்டு’. இக்காலத்தில் ஒரு படம் 10 நாட்கள் ஓடினாலே பெரிய விஷயம். ஆனால், ‘தில்லுக்கு துட்டு’ 75 நாட்கள் கடந்து சாதனை படைத்தது. அதற்காக கேடயமும் பெற்றேன்.

இப்போது இரண்டாவது பாகம் !  மாறன், ஆனந்த், முருகன், சேது ஆகியோருடன் சேர்ந்து இந்த கதையை எழுதினோம். ஷபீர் இசையமைத்திருக்கிறார். இரண்டு பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. ” என்றார்

 
சந்தானம் பேசுகையில் , “நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாக பார்த்தோம்.

அதுபோல, இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

நான் இந்தளவுக்கு வளர்வதற்கு எனக்கு முதுகெலும்பாக இருப்பது மாறன், ஆனந்த், குணா, சுந்தர், சேது மற்றும் ஜான்சன் ஆகியோர்கள் தான்.

‘லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியது போல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம்.

ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரை தேர்ந்தெடுத்தோம்.

‘மொட்டை’ ராஜேந்திரன்,  விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள்.

கேமரா மேன் தீபக் நன்றாக பணியாற்றியிருக்கிறார். பேய் படத்திற்கு காட்சிகள்தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மை படம் போல இருக்கும்.

அதற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார்.அதேபோல், காதல் பாடலை நன்றாக எடுத்துக்  கொடுத்திருக்கிறார்.

ஷபீர் நன்றாக இசையமைத்திருக்கிறார்.இரண்டு பாடல்களுக்கும் சாண்டி தான் நடனம் அமைத்திருக்கிறார்.

கலை இயக்குநர் மோகன், சண்டை பயிற்சி தினேஷ், 
நடிகராக இருப்பதை விட தயாரிப்பாராக இருப்பது தான் கஷ்டம்.

பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றி தான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன்.

வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது.

வெளியாவதற்கு தாமதம் ஆகிறது.

நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன். சிம்புவிற்கென்று கதை எழுதி, நான் இயக்க வேண்டும். எந்த படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

என்னை ‘லொள்ளு சபா’வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு  அவர்களுக்கு நன்றி. என்னை கதாநாயகனாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் ரசிகர்கள் நீங்க தான் என்னுடைய முன்மாதிரி என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திரா சௌந்தராஜன் இப்படத்தின் கதைக்கு உறுதுணையாக இருந்தார். மையக் கதையை அவர் தான் எழுதியிருக்கிறார்.” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *