ஹேன்ட்மேட் பிலிம் சார்பில் சந்தானம் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக ஸ்ரித்தா சிவதாஸ், உடன் நான் கடவுள் ராஜேந்திரன் , ஊர்வசி நடிப்பில்
ராம் பாலா இயக்கி இருக்கும் படம் தில்லுக்கு துட்டு 2 ( இதே நாயகன் மற்றும் இயக்குனர் கூட்டானியில் வந்தது தில்லுக்கு துட்டு முதல் பாகம்) தில்லா துட்டு தரலாமா ? பார்க்கலாம் .
ஏரியாவில் குடித்து விட்டு தினமும் ரகளை செய்யும் நபர்கள் விஜியும்( சந்தானம்) அவனது தாய்மாமனும் ( ராஜேந்திரன்). . அதில் பாதிக்கப்படுவோரில் டாக்டர் ஒருவரும் (கார்த்திக்) அடக்கம் .
டாக்டரின் மருத்துவமனையில் வேலை செய்யும் கேரள நர்ஸ் மாயா ( ஸ்ரித்தா சிவதாஸ்) . அவரிடம் யாரவது ஐ லவ் யூ சொன்னால் உடனே ஒரு பேய் வந்து லவ் சொன்னவரை மிரட்டும் . மீறியும் தொடர்ந்தால் கொன்று விடும் .
அப்படி ஒருவனை கொல்கிறது. டாக்டர் தப்பிக்கிறார் . வேலா மீது கடுப்பில் இருக்கும் டாக்டர், விஜியின் கண்ணில் மாயாவை காட்டி விட்டால் அவன் லவ் சொல்வான் . அடங்க மாட்டான் . எனவே செத்துப் போவான் என்று திட்டமிட்டு , நிகழ்த்துகிறார் .
வேலாவை பேய் மிரட்டுகிறது . மாயாவின் தகப்பன் பெரிய மந்திரவாதி என்றும் தன் மகளை யாரும் சீண்டாமல் இருக்க அந்த மந்திரவாதி பேயை ஏவி இருக்கிறான் என்று விஜிக்கு கூறப்படுகிறது .
மந்திரவாதியை சந்திக்க , தாய்மாமனோடு கேரளா போனால் , அங்கே மந்திரவாதி பெரிய டுபாக்கூர் என்று புரிகிறது . கூடவே இவனைப் போலவே இன்னொரு டுபாக்கூர் பெண் சாமியாரும் ( ஊர்வசி) இருப்பது தெரிகிறது .
ஆனால் அதற்குப் பிறகும் ஐ லவ் யூ சொன்னால் பேய் வந்து மிரட்டுகிறது . அடிக்கிறது .
ஏன்? எப்படி? அப்புறம் என்ன என்பதே இந்த தில்லுக்கு துட்டு 2 .
முதல் பாகத்தின் அதே பாணி .
காமெடி ஒன லைனர்களில் ஸ்கோர் செய்கிறார்கள் இயக்குனர் ராம் பாலாவும் சந்தானமும் .
அதையும் தாண்டி ஆக்ஷன் மற்றும் சிச்சுவேஷன் காமெடிகள் மூலமாகவும் பலம் சேர்த்து இருக்கிறாய் இயக்குனர்.
ஆங்காங்கே வரும் ஆபாச காமெடிகளை தவிர்த்து இருக்கலாம் .
குரலை எல்லாம் மாற்றி பேசி வித்தியாசம் காட்டி இருக்கிறார் சந்தானம் .
நாயகி ஒகே .
ராஜேந்திரனும் ஊர்வசியும் தங்கள் பங்களிப்பால் பலம் சேர்க்கிறார்கள் .
கடைசியாக ஒரு கதை சொல்கிறார்களே .. இன்னும் சிறப்பாக கனமாக முயன்று இருக்கலாம் .
மார்த்தாண்டவர்மன் , விலியம்ஸ் என்று பெயர்களை சொல்வதற்கு இந்திரா சவுந்தரராஜன் எதற்கு ?
தில்லுக்கு துற்று 2…. தில்லு கொஞ்சம் .. எனவே துட்டு கொஞ்சம்