பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார் தயாரிப்பில் கார்த்தி – ரகுல்ப்ரீத் சிங் ஜோடியாக நடிக்க ரசத் ரவிசங்கர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் தேவ்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்
தேவ் படக் குழுவால் பெரிதும் பாராட்டப்படும் வருங்கால இயக்குனர்.
அவரிடம் பேசினோம் இயக்குனர் வசந்த் இயக்கிய “சத்தம் போடாதே, மூன்று பேர் மூன்று காதல், அதுக்கு அப்புறம் அவரோட பல விளம்பர படங்களிலும் வேலை செஞ்சேன்.
அப்புறம் டைரக்டர் சாமி சார் கிட்ட சிந்துச் சமவெளி கங்காரு, உதய நிதி ஸ்டாலின் நடிப்பில் டைரக்டர் அகமது இயக்கிய மனிதன், அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கிய அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா,

சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கி இருக்கும் மிக மிக அவசரம்.. இப்போ தேவ் கார்த்தி சாரோட அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் டைரக்ட் பண்ணின தேவ் படத்துல இணை இயக்குனர்.. இப்படி வந்து இருக்கேன் .
பொதுவா வடநாட்டிலிருந்து வர்ற கதாநாயகிகளால தமிழ அவ்வளவா உச்சரிக்க முடியாது. அவங்களுக்கு புரிகிற மாதிரியும் சரியான உச்சரிப்போடயும் நான் கத்துக் கொடுப்பேன் அதுல அவங்க இம்ப்ரஸ் ஆவாங்க. அண்மையில் கூட ஆகி ரகுல் பிரீத் சிங் தேவ் படபிரஸ்மீட்டில் ‘கண்ணன் ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க’ன்னு சொன்னாங்க.
அவங்க ரொம்ப திறமையான ஒரு நடிகை, எல்லாருக்கும் மரியாதை கொடுக்கிற ஒரு சின்சியரான ஹீரோயின். நிச்சயமா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை அவங்களால அடைஞ்சு தக்க வச்சுக்கவும் முடியும், அவ்வளவு திறமை இருக்கு அழகு அவங்க கிட்ட இருக்கு .

நிச்சயமா அவங்களால நம்பர் ஒன் நடிகையாக தமிழ் சினிமால வர முடியும். அதற்கான எல்லா தகுதியும் அவங்களுக்கு இருக்கு.
கார்த்தி சார் ரொம்ப அமைதியா இருப்பாரு ஒவ்வொரு காட்சியையும் அவருக்கு தெளிவாக விளக்கி அவரை கன்வின்ஸ் பண்ணனும் ஒரு காட்சிக்கு ரொம்ப நேர்மையாகவும் ரொம்ப உண்மையாகவும் இருப்பார்.
நன்றாக நடிக்கக் கூடியவர்.சமுதாயத்துக்கு நல்ல கருத்துக்களை மட்டுமே சொல்லணும் அப்படின்னு யோசிக்கிற ஒரு மனுஷன் .நிச்சயமா தமிழ் சினிமா அவரை வேறு ஒரு இடத்துக்கு கொண்டு போகும்.

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் மிகத் திறமையானவர் எல்லோரிடமும் அன்பாக வேலை வாங்க கூடியவர் முதல் பட இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லோரிடமும் வேலை வாங்கியவர்.
இயக்குனர் கௌதம் மேனன் என்று சொல்லும் அளவிற்கு இளமை கலந்த காதல் கதையும் வீரம் கலந்த எமோஷன்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு படைப்பாக மிகவும் அற்புதமாக படம் வந்திருக்கிறது.
அடுத்து தயாரிப்பாளர் லக்ஷமன் சார் காட்சி க்கு என்ன தேவையோ அது எவ்வளவு பெரியசெலவவாக இருந்தாலும் அந்த செலவை அவர் செய்வார் ரொம்ப நேர்மையானவர்.
உண்மையாகவே தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்… ஒரு முதல் பட இயக்குனருக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் லக்ஷ்மன் குமார் அவர்கள்.

அடுத்து கேமராமேன் வேல்ராஜ் சார் விஷுவலா இந்த படம் ரொம்ப முக்கியமான கட்டத்துக்கு போக அவர் மட்டுமே காரணம் .
எல்லாருமே அவங்கவங்க பணியை சிறப்பாக செஞ்சு இந்த படத்த ஒரு வேற லெவலுக்கு கொண்டு வந்து இருக்காங்க.
இந்த டீமோட நான் வேலை செய்ததற்கு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். ரகுலுக்கு மறுபடியும் ஒரு நன்றியை தெரிவிக்கிறேன் ஏன்னா அவங்க ஒரு பெரிய ஹீரோயின்.. அவங்க வந்து மேடையில் என் பெயர் சொல்லி பாராட்டணும்னு அவசியம் கிடையாது .

ஆனாலும் இதை சொல்ல முன்வந்திருக்கிறது ரொம்ப பெரிய விஷயமா நான் நினைக்கிறேன் .
என்னோட முயற்சிகள் போயிட்டு இருக்கு நிச்சயமா இந்த வருடம் என்னுடைய படத்தை நான் ஆரம்பிப்பேன்” என்கிறார்
