மூன்றாவது படத்திலேயே மிக முக்கியமான இயக்குனராக வளர்ந்து இருக்கும் இயக்குனர் அட்லீயின் அடுத்த அடுத்த அவதாரம் தயாரிப்பாளர் அவதாரம் .அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல..
அடுத்தடுத்து மூன்று படங்கள் (இதிலும் பிரம்மாண்டம்தான் )
விவரம்…..
ராஜா ராணி, தெறி வெற்றிப் படங்களுக்குப் பிறகு விஜயை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. தீபாவளி வெளியீடு என அறிவித்து விட்டு பரபரப்பாக படப்பிடிப்புப் பணிகளில் இருந்த அட்லீ,
தனது தயாரிப்புகளைப் பற்றி விளக்குவதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
” கடந்த 6 வருடங்களாக என் இயக்குனர் பயணத்தில் சகோதரனாக, குடும்பத்தில் ஒருவராக என்னை ஆதரித்த, என்னை ஆளாக்கிய பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி.
உதவி இயக்குனராக இருந்த எனக்கு முதல் பட வாய்ப்பை அளித்த ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி, தன் உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்து வளர்த்து விடும் என் குருநாதர் ஷங்கர் மாதிரி,
நான் வளர்ந்த சினிமாவுக்கு நானும் ஒரு பங்காக இருந்து நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பட நிறுவனம் தான் ‘ஏ ஃபார் ஆப்பிள்
எல்லாருக்கும் பிடித்த ஒரு எளிய பெயர் என்பதால் அதை வச்சேன்
முதல் படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஐக் கை ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறேன். ஐக் எம்.ஆர்.ராதவின் பேரன், ரொம்ப திறமைசாலி.
எனக்கு பேய்னாலே ரொம்ப பயம், அதனாலேயே பேய் பத்தி அதிகம் பேசிட்டு இருப்பேன் அவர் பேய் கதை சொன்னார் .
கணவன் மனைவி பெட்ரூம் பேய் சம்மந்தப்படுத்தி ஒரே ஒரு சீன்தான் சொன்னார் .
ஐக் – சங்கிலி புங்கிலி கதவ தொற
” முழு கதை பண்ணிக் கொண்டு வாங்க”ன்னு சொன்னேன் மூணு மாசம் டைம் எடுத்து பண்ணிட்டு வந்தார் சூப்பரா இருந்ததுஉடனே தயாரிக்க முடிவெடுத்து தயாரிச்சுட்டேன்
அந்தப் படத்தைத் தொடர்ந்து என் நண்பன்… என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை இரண்டாவது தயாரிப்பாக தயாரிக்கிறேன் .
இவர் எனக்காக என் படங்களில் நிறைய உழைத்தவர் . இந்த சூர்யா பால குமாரன் வேறு யாருமல்ல . எழுத்துச் சித்தர் அய்யா பாலகுமாரனின் மகன் .
சூர்யா பாலகுமாரன்
அவர் இயக்கும் படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி .
மூன்றாவது படம் என் டீமில் சிறந்த திரைக்கதையாளனாக இருக்கும் அசோக் இயக்க நான் தயாரிக்கும் படம் . அசோக் மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் .
டிஸ்கஷனில் காமெடி சீன் பண்ணும்போது அவர் என்ன சொல்கிறார் என்று எல்லோரும் கவனிப்போம் . அசொக்குக்குள் ஒரு மாடர்ன் பாக்யராஜே இருக்கிறார் .
அசோக்
அப்படிப்பட்ட அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாக தயாரிக்க இருக்கிறேன்.
முதல் படமான சங்கிலி புங்கிலி கதவ தொற விரைவில் திரைக்கு வருகிறது .
இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வரும்
நான் இயக்கும் தளபதி 61 படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது “என்றார் அட்லீ.
”பழம் சாப்பிட்டா மட்டும் போதாதுன்னு விதையும் போடறீங்க பாருங்க . அது பாராட்டுக்குரிய விஷயம் ” என்று அட்லீயை கை குலுக்கிப் பாராட்டி விட்டு வந்தேன் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462