டிரைவர் ஜமுனா @ விமர்சனம்

18 ரீல்ஸ் சார்பில் எஸ் பி  சவுத்ரி தயாரிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், நடிப்பில் கின்ஸ்லின் என்பவர் இயக்கி இருக்கும் படம். 

டிரைவராக அப்பா கொலை செய்யப்பட்டு அம்மா நரம்பு இழுப்பு நோய்க்கு ஆளாகி , தம்பி வெளியூரில் இருக்கும் நிலையில்  அத்தையின் விருப்பமின்மையையும் மீறி குடும்பத்துக்காக, கால் டாக்சி டிரைவராக இருக்கிறார் ஜமுனா ( ஐஸ்வர்யா ராஜேஷ்) 
 
வெளியே நல்லவராகவும் உண்மையில் நேர்மாறானவராகவும் இருக்கும் அரசியல்வாதி ஒருவரை (ஆடுகளம் நரேன்) கொலை செய்ய வரும் கொடூரமான – போதைப்பழக்கம் கொண்ட நபர்களை உடைய ஒரு கூலிப்படை ஜமுனாவின் காரில் ஏறுகிறது. அதை அறிந்த ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி இதற்குள் புகுந்து விசயத்தை தான் பழி தீர்க்க வேண்டிய விசயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். டிரைவர் ஜமுனாவுக்கு என்ன ஆகிறது … 
 
என்று கதையைக் கொண்டு போய் ஒரு நிலையில் தோசையைத் திருப்பிப் போட்ட கதையாக,  ‘மாத்தி யோசி ; தலைகீழாக யோசி’ பாணியில் ஒரு கதையை சொல்லி முடிக்கிறார்  இயக்குனர் கின்ஸ்லி 
 
கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா . சிறப்பான நடிப்பு 
 நல்ல லொக்கேஷன்களில் சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார் கோகுல் பினாய். 
 
ஜிப்ரான் இசை ஒகே ரகம் . 
 
அனல் அரசுவின் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டல். 
 
கடைசியில் சொல்ல வந்த கதைக்குரிய பொருத்தப்பாடுகளை நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் கதாபாத்திர  வடிவமைப்போ , காட்சிகளோ இல்லாதது ஒரு பின்னடைவு. 
எனினும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பரபரப்பான படமாக வந்திருக்கிறது டிரைவர் ஜமுனா 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *