என் காதலே @ விமர்சனம்

ஸ்கை வாண்டரர்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் ஜெயலக்ஷ்மி என்பவர் தயாரித்து எழுதி இயக்க, லிங்கேஷ், பிரிட்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் லியா, திவ்யா, மதுசூதனன் , கஞ்சா கருப்பு நடிப்பில் வந்திருக்கும் படம். 

சுனாமியில் தங்கையையும் தங்கையின் கணவரையும் பறிகொடுத்த மீனவர் குப்பத் தலைவர் ஒருவர் ( மதுசூதனன் ) தங்கையின் மகனை தன் பிள்ளையாக எடுத்து வளர்க்கிறார்.அவன் இளைஞனாக,  தலைவரின் மகளுக்கு (திவ்யா) அவன்( லிங்கேஷ்) மீது காதல். 

இந்த நிலையில் லண்டனில் இருந்து தமிழ்க் கலாச்சாரம் கற்க வரும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ( லியா) அவனுக்கும் காதல் வர , 

கொந்தளிக்கும் தலைவர் அந்தப் பெண்ணை விரட்ட, தலைவருக்கு விரோதமான கூட்டத்து ஆட்களில் ஒருவன் (காட்பாடி ராஜன்) இதில் நுழைய,  என்ன நடந்தது என்பதே படம் . 

சொல்ல வந்த விஷயத்தை பெரிதாக குறைகள் இன்றி திரையில் பதித்து இருக்கிறார்கள் . 

சாண்டி சாண்டேல்லா இசையில் பாடல்கள் தெளிவாகப் புரிவதே இனிமை போன்ற ஓர் உணர்வை தருகிறது . டோனி ஜான் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது .

திவ்யா , லியா, மது சூதனன் , லிங்கேஷ் அனைவருமே சிரத்தையாக நடித்துள்ளனர் . 

மாறன் , கஞ்சா கருப்பு ஒரு  ஒரு காமெடியை வைத்துக் கொண்டு பல சீன ஓட்டுகிறார்கள். அமெச்சூர் தனம் .

சிறுவயது முதல் தூக்கி வளர்த்த பிள்ளையை மனைவியாகப் பார்க்க முடியாத — அவள் தன் அம்மாவின் சேலையைக் கட்டி வந்த நிலையில் அவளை அம்மாவாகவே பார்க்கிற ஹீரோ என்ற விஷயம் சிறப்பு , 

ஆனால் இது மட்டுமல்ல .. . கதை, திரைக்கதை, வசனம் , இயக்க பாணி எல்லாமே அரதப் பழசு என்பதுதான் பெரும் பிரச்னை . 

எனவே , 

என் காதலே … ஏன் காதலே ? ஏன்? 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *