பாக்கணும் போல இருக்கு @ விமர்சனம்

paak 1

எப் சி எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி சந்திரசேகர் தயாரிக்க, பரதன் , அன்சிபா லிவிங்ஸ்டன் , ஜெயப்பிரகாஷ் நடிப்பில்,

 கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கி இருக்கும் படம் பாக்கணும் போல இருக்கு. படம் பாக்கணும் போல இருக்கா ? பேசுவோம் 

நாயகனுக்கும் நாயகிக்கும் சிறுவயது முதலே பழக்கம் . அவனுக்கு சிறுவயது முதலே காதல் . அவள் வேறு ஊர் போய் வளர்ந்து மீண்டும் ஊருக்கு வருகிறாள் . 
paak 2
அவன் காதல் சொல்ல ஆரம்பத்தில் மறுக்கும் அவள் பின்னர் ஏற்கிறாள் . 
இருவரும் ஒரு திரைப்படத்துக்கு போக, அங்கே திரை விமர்சனத்துக்கு ரசிகர் விமர்சனம் செய்யும் கேமராவில் அவர்கள் விழ, அதை ஒளிபரப்பில் எல்லோரும் பார்க்க , காதல் ஊருக்கு தெரிய வருகிறது . 
இரண்டு பேரின் பெற்றோரும் பார்த்துப் பேசி திருமணம் நிச்சயம் செய்ய நாள் குறிக்க அந்த நாளில் நாயகனின் அண்ணனுக்கும் நாயகியின் அக்காவுக்கும் காதல் வருகிறது . 
paak 3
இரண்டு நிச்சயத்தையும் ஒன்றாக வைக்க எல்லோரும் முடிவு செய்ய, அப்படி செய்யக் கூடாது என்கிறார் குடும்பத்துக்கு மூத்த பாட்டி . 
இந்த நிலையில் காதலனும் காதலியும் பிரியும் நிலை ஏற்படுகிறது . காரணம் என்ன என்பதே படம் . 
படத்தின் துவக்கத்தில் அருள்தேவ் இசையில் வரும் ரெட்டை சடை பாட்டு சூப்பர் ஹிட் . காட்சியில் நடனத்தோடு ஜல்லிக்கட்டு காட்சிகளை இணைத்து இருப்பதும் அருமை 
paak 4
சூரி, பிளாக் பாண்டி இருவரும் ரொம்ப பிரெஷ்ஆக இருக்கிறார்கள். சூரி, பிளாக் பாண்டி  கஞ்சா கருப்பு சேர்ந்து  நிறைய பேசுகிறார்கள் . அதில் பலமுறை சிரிக்கவும் வைக்கிறார்கள் 
நீளம் குறைத்து  இடைவேளையிலேயே படம் முடிந்த உணர்வு வருவதையும் தவிர்த்து இருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *