சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைக்க்குப் பின்னால் உள்ள கலைஞர்கள் ஒருங்கிணைந்து ‘பேமஸ் பிரிமியர் லீக்’ என்ற பெயரில் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்கள்.
இந்த ‘ஃபேமஸ் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள்,
நான்கு அணிகளாக பிரிந்து விளையாட இருக்கிறார்கள்.
ஃபேமஸ் பிரிமியர் லீக் என்ற நிறுவனம் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கை இணைத்து நிகழ்சிகள் நடத்தக் களம் இறங்கி இருக்கிறது
இதன் முதன்மை நிர்வாக இயக்குனராக ரவி ரெட்டி, , இயக்குனர்களாக முரளின் சதனாலா, ரொக்கம் நரசிம்ம ரெட்டி, ஆலோசகராக பானு பிரகாஷ்,
தலைமை நிர்வாக அதிகாரியாக லோஹித் குமார் ஆகியோர் இருக்கின்றனர் .
இந்த ஃபேமஸ் பிரிமியர் லீக் நிறுவனம் பல்வேறு விளையாட்டுக்களை பிரபலங்களை வைத்து ஆட வைத்து நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறது. கிரிக்கெட், வாலிபால் , பேட் மின்ட்டன்
மற்றும் பெண்களுக்கான விளையாட்டுகளை பிரபலங்களை வைத்து ஆட வைத்து நிகழ்ச்சி நடத்தும் இந்த அமைப்பின் திட்டத்தில் முதல் விளையாட்டாக வழக்கம் போல கிரிக்கெட் முதலாவதாக வருகிறது .
அதன்படி தொடங்கப்பட்டு இருக்கும் இந்த ஃபேமஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் பருவத்தில் தமிழ் நாடு , ஆந்திரா, கர்நாடகா , கேரளா ஆகிய நான்கு மாநில அணிகள் ஆட இருக்கின்றன .
(அடுத்த பருவத்தில் வட இந்திய மாநிலங்களை சேர்ந்த அணிகளும் கலந்து கொள்ளுமாம் )
இந்த முதல் பருவ ஃபேமஸ் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி நவம்பர் மாதம் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது
இதில் பங்கு பெறும் ஒவ்வொரு அணிகளுக்கான பெயர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’, தெலுங்கு அணிக்கு ‘தெலுங்கு தண்டர்ஸ்’,
கன்னட அணிக்கு ‘கன்னடா கிங்ஸ்’, கேரளா அணிக்கு ‘மலையாளி ஹீரோஸ்’ என்று பெயர்கள் வைத்துள்ளனர்.
சர்வதேச தரத்திற்கு இணையாக திறமையான பயிற்சியாளர்களை கொண்டு திரை நட்சத்திரங்கள் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த கிரிக்கெட் போட்டியில்,
மீடியா பிரபலங்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், திரை நட்சத்திரங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.
தமிழ் தலைவாஸ் அணியில், விவேக், சாக்ஷி சிவா, இசையமைப்பாளர் தமன், எஸ்.பி.பி.சரண், விஜய் ஆனந்த், தேவ் ஆனந்த், ஈஸ்வர், ராஜ்குமார், ஜெயந்த், விக்கி,சதீஷ், ஸ்ரீதர், சேத்தன், பாலாஜி,
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் நிகழ்ச்சி நடத்துனருமான கணேஷ்
ஆகியோர் விளையாடுகிறார்கள். அணியின் மேனேஜர் பானுபிரகாஷ்.
மேற்படி தமிழ் தலைவாஸ் அணியின் அறிமுக விழாவில் நடிகர் பாபி சிம்ஹா கலந்துக் கொண்டு வீரர்களையும் அவர்களின் அடையாள சட்டையையும் (ஜெர்ஸி) அறிமுக செய்து வைத்தார் .
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடையைப் போலவே மஞ்சள் வண்ணத்திலேயே இந்த உடையும் இருந்தது சிறப்பு .
நிகழ்ச்சியில் பேசிய விவேக், சாக்ஷி சிவா, விஜய் ஆனந்த், தேவ்ஆனந்த், ஈஸ்வர், ராஜ்குமார், ஜெயந்த், விக்கி, சதீஷ், ஸ்ரீதர், சேத்தன், பானுபிரகாஷ். ” ஆகிய பலரும்
” நாங்கள் ரொம்ப நாட்களாகவே கிரிக்கெட் ஆடி வருகிறோம் . ஞாயிற்றுக் கிழமை என்றால் கட்டாயம் ஆடுவோம். வேலை இல்லாத வேதனையைக் கூட மறக்கடிக்கும் சக்தி அதற்கு இருக்கிறது .
ஒரு நிலையில் எங்கள் குடும்பத்தினரே ஞாயிறு அன்று எங்களை நேரத்துக்கு எழுப்பி விட்டு விளையாட அனுப்பும் அளவுக்கு அது முக்கிய நிகழ்வாக மாறியது .
ஒவ்வொரு முறையும் ஆடி முடித்த பின்பு வரும் சந்தோஷமே அலாதியானது . இன்று அது இப்படி ஒரு பெரிய நிகழ்வாக மாறி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது ” என்றனர் .
நடிகர் பாலாஜி பேசும்போது
” சி சி எல் எனப்படும் சினிமா கிரிக்கெட் லீக் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியின் பொது ஏற்பட்ட காயம் காரணமாக ஆட முடியாமல் போனவன் நான் . இப்போது இந்த அணியில் ஆடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது ” என்றார்
அணியில் விளையடும் இசையமைப்பாளர் தமன்,
“நானும் இந்த டீமில் விளையாடுவது சந்தோஷமாக இருக்கிறது .
எனது ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் ஆட்களை வேலைக்கு எடுக்கும்போது அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமா? என்று பார்ப்பேன் . எந்த அளவுக்கு நன்றாக விளையாடறாங்களோ,
அந்த அளவுக்கு வேலை உறுதி . எனக்கு கிரிக்கெட் என்றால் அவ்வளவு உயிர் ” என்றார் .
தமிழ் தலைவாஸ் அணியின் மஞ்சள் வண்ண அடையாள உடையை அறிமுகப் படுத்திய பாபி சிம்ஹா
” என்னை இந்த நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தற்கு நன்றி.
எனது கிரிக்கெட் நாலேட்ஜ் பற்றி நீங்க தெரிஞ்சுக்கணும் .
ஒரு முறை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருந்தபோது அங்கே போன நான் ஒரு குறிப்பிட்ட அணியைக் காட்டி அதானே நம்ம இந்திய அணி ?’ என்று கேட்டேன் .
அதற்கு கார்த்திக் சுப்புராஜ் தலையில் அடித்துக் கொண்டு ‘ கர்மம் கர்மம் ரெண்டுமே இந்திய அணி இல்ல’ன்னு சொன்னான் . எனக்கும் கிரிக்கெட்டுக்கு அவ்ளோ தூரம் ” என்றது , கல கல லக லக !
ஃபேமஸ் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி நவம்பர் மாதம் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது










