நட்டி நடராஜ், அனன்யா , லால் , அஸ்வந்த் நடிப்பில் ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் வந்திருக்கும் படம் காட் ஃபாதர்.
தாதா ( லால்) ஒருவனின் மகனுக்கு இருதய நோய் வந்து விட்ட நிலையில், அவனைக் காப்பாற்ற பொருத்தமான இதயத்தை எப்படியாவது பெறும் முயற்சியில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாழும் நடுத்தர தம்பதியின் ( நட்டி நடராஜ்- அனன்யா) மகனான சிறுவனை ( அஸ்வந்த்) கொன்று இதயத்தை எடுத்து தன மகனுக்கு வைக்க முயல்கிறான் தாதா .
பெற்றோர்களால் பிள்ளையைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே காட் ஃபாதர்.
அப்பாவே கடவுள் என்ற பொருளில் காட் ஃபாதர் என்ற பெயரை பயன்படுத்தி இருக்கும் விதம் அபாரம்.
நேர்மையும் பாசமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிறார்கள். நல்ல விஷயம் .
நாட்டி மிக சிறப்பாக தந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மகனைக் காக்க படபடப்பு பயம் அப்புறம் துணிவு என்று கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் .
அம்மாவாக அனன்யா அபாரமான நடிப்பு .
லால் தாதாவாக மிரட்ட, அஸ்வந்த் உள்ளம் கொள்ளை கொள்கிறான் .
நவீன் ரவீந்திரனின் பின்னணி இசை , சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு இரண்டும் படத்துக்கு பலம்.
தொய்வான முன் பாதி, குடும்பப் பாட்டு , தேவையற்ற கொலைகள் என்று கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மென்ட் என்ற பெயரில் தேவையற்ற விசயங்கள், ஓர் அபார்ட்மென்டுக்குள் சாத்தியம இல்லாத விசயங்களை சொல்லும் லாஜிக் மீறல்கள், நேர்த்தி இல்லாத கிராபிக்ஸ் , எக்ஸ்ட்ரா கிளைமாக்ஸ் சுமை இவை படத்தின் பலவீனங்கள் .
எனினும் காட் ஃபாதர்… ஒகே பிரதர்