பழம் பெரும் எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய வரலாற்று நாவல் கன்னி மாடம் .
நல்ல நடிகராக அறியப்படும் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆகும் படத்தின் பெயரும் இதுவே.
‘காதலிச்சவன் கூட வாழப் போற வரும் பொண்ணுக்கு ஓடு காலி என்ற பட்டம், அவ நல்லபடியா வாழ்ந்து காட்டும் வரை இருக்கத் தான் செய்யும்’ என்ற டேக் லைனோடு அறிமுகம் ஆகி இருக்கும் இந்தப் படத்தில், காதலித்து ஓடி வந்து புது இடத்தில்வாழ்க்கையை துவங்கும் பெண்ணின் உணர்வுகளே படமாக !
ஆரம்பத்தில் ஆட்டோ டிரைவராக பணியாற்றிய போஸ் வெங்கட் , இந்தப் படத்தில் ஆட்டோ டிரைவர்களை கவுரவப் படுத்தும் ஒரு கதாபாத்திரத்தையும் ஆயுத பூஜைக்கு ஆட்டோ ஸ்டேண்டுகளில் அலற விட புதிதாக ஒரு பாடலையும் கொடுத்திருக்கிறார் . பாட்டு இப்போதே ஹிட் .
”பொன்வானம் பன்னீர்த் தூவுது இந்நேரம்…” பாடலை நினைவு படுத்தும் பாடல் ஒன்றை போட்டு இருக்கும் அறிமுக இசையமைப்பாளர் ஹரி சாய் .
(ஆரம்பத்துலயே இப்படின்னா, அனிருத் லெவலுக்கு வந்த அப்புறம் மனுஷன் என்ன பண்ணக் காத்திருக்காரோ ) பாடல்கள் அனைத்தையும் இனிமையாக கொடுத்து இருக்கிறார் .
சரி இதுக்கும் பா.ரஞ்சித்துக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா ?
பெரியாரின் சித்தாந்தத்தில் அடிப்படையில் சாதி மறுப்பு, விதவை மறுமணம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கிறதாம் .
தாழ்ந்த்தப்பட்ட மக்களுக்கான படங்களை தரத்தோடு தயாரித்து வரும் பா.ரஞ்சித் தயாரித்து இருக்க வேண்டிய படம் இது என்கிறார்கள் சிலர் .
பார்ப்போம் . உண்மையா இல்லை ஊதலா என்பது வரும் 21 ஆம் தேதி தெரிந்து விடும் .
அன்றுதான் படம் ரிலீஸ் !
