ஹரஹர மகாதேவகி இசை …சை … சை .. வெளியீடு !

புளூ கோஸ்ட் (Blue Ghost) புரடக்ஷன்ஸ்  மற்றும்  தங்கம் சினிமாஸ் தங்க ராஜ் இணைந்து தயாரிக்க ,  கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ரானி நடிப்பில்,
 
  சன்தோஷ் P ஜெயகுமார் (அப்படிதான் அவர் ஸ்பெல்லிங் போடுறாரு )   இயக்கியுள்ள படம் ஹரஹர மகாதேவகி . இசை பாலமுரளி பாலு , ஒளிப்பதிவு செல்வ குமார்.
 
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டத்தையும் பாடல்களையும் திரையிட்டனர் .
 
அடுல்ட் காமெடி அப்படிதான் இருக்கும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும் சகிக்க முடியாத ஆபாச வார்த்தைகள் , முக பாவனைகள் நிறைந்த முன்னோட்டம் . 
 
இது போதாதென்று நிகழ்ச்சி வர்ணனையாளர் மற்றும் இசையமைப்பாளர் பால முரளி பாலுவும் மேடையிலேயே ஆபாசமாக பேசியது கொடுமை .
 
ஒருவேளை அடுல்ட் ஆடியோ விழாவோ என்னவோ. என்ன செய்ய தயாரிப்பு நிறுவனத்தின் பேரே அப்படி .. புளூ கோஸ்ட் (Blue Ghost) புரடக்ஷன்ஸ்! 
 
நிகழ்ச்சியில் பேசிய நாயகன் கவுதம் கார்த்திக் ”  எல்லோரும் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்து ரசித்திருப்பீர்கள்(?).
 
 இந்த கதை பலருக்கு சென்று மீண்டும் என்னை தேடி வந்துள்ளது. இயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது,
 
 முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களைதான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் நான் மிகவும் ரசித்து , சிரித்து கேட்டேன் (!)  
 
கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். (!!) அதன் பிறகு இயக்குநர் என்னிடம் ஹரஹர மகாதேவகியின் கதையை கூறினார்.
 
எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் நான் சந்தோஷமாக என்ஜாய் செய்து நடித்தேன். அனைவரும் கடினமாக உழைத்தோம்.
 
ஆனால் செட்டில் எல்லோரும் சிரித்துக்கொண்டே வேலைசெய்தது அருமையாக இருந்தது. என்னுடைய கடினமான காலகட்டத்தில்,
 
 தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் என்னை அழைத்து இந்த படத்தை கொடுத்து உற்சாகத்தை , நம்பிக்கையும் தந்தார்.
 
இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதுமையான படமாக இருக்கும். நான் ஹரஹர மகாதேவகி டீமோடு மீண்டும் ஒரு படத்துக்காக இணைகிறேன்.
 
படத்தின் டைட்டிலை இயக்குனரே அறிவிப்பார். நான் இன்று காலை என்னுடைய ரசிகர்களை சந்தித்தேன் என்னை மகிழ்விக்கும் வகையில் 25கிலோ கேக்கோடு வந்து
 
என்னுடைய பிறந்த நாளை இரண்டு நாட்களுக்கு முன்பாக இன்றே கொண்டாடினார்கள். என்னுடைய ரசிகர்கள் எல்லோரும் தான் என் குடும்பம்” என்றார் கௌதம் கார்த்திக்.
 
நிக்கி கல்ரானி தன் பேச்சில் ” டார்லிங் படத்தின் மூலம் என்னை  அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள்,
 
 இந்த படத்தின் கதையை கேட்கும்படி கூறினார்.இயக்குநர் சந்தோஷ் என்னுடைய வீட்டுக்கு வந்து கதை சொன்னார்.
 
கதையை கேட்டு சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது.(?!) சந்தோஷ் என்னிடம் கதை சொன்ன போது என்னுடைய போர்ஷனில் வரும் விஷயங்களை மட்டும்தான் கூறினார்.
 
இப்போது இங்கே வந்த பிறகு தான் கதை , திரைக்கதை , வசனம் என்று அனைத்தும் எனக்கு கொஞ்ச கொஞ்சமாக தெரிகிறது. அனைத்து நன்றாக உள்ளது. (??)  
 
கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல நண்பன். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு தமிழ் சரியாக தெரியாததால் , தமிழ் கற்று கொடுத்தார்.
 
இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் பாடல்கள் அனைத்து கேட்க அருமையாக உள்ளது (!!!!!)”  என்றார் 
 
தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் ஞானவேல் ராஜா பேசியது :- கௌதம் கார்த்திக்கை வைத்து,

 
எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. அந்த படத்தை “ ஹரஹர மகாதேவகி “ இயக்குநர் சந்தோஷ் தான் இயக்குகிறார் என்றார் ஞானவேல் ராஜா.
 
இதை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கவுள்ள அப்படத்தின் டைட்டில் “ இருட்டு அறையில் முரட்டு குத்து “ என அறிவித்தார் இயக்குநர் சந்தோஷ். ( என்னத்தைச் சொல்ல!)
 
விழாவில் தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் கதிரேசன் , 2D Entertainment ராஜ சேகர் பாண்டியன் , தயாரிப்பாளர் தங்கராஜ் , ,ஒளிப்பதிவாளர் செல்வகுமார் , ,
 
நடிகர்கள் ரவிமரியா , சதீஷ் , மயில்சாமி , R.K.சுரேஷ் , தயாரிப்பாளர்கள் கே.ஆர் , அருள்பதி , அவ்ரா சினிமாஸ்  மகேஷ் ,
 
இயக்குநர் ஆர்.கண்ணன் , கௌரவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.​

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *