இசையமைப்பாளர் தரண் — நடிகை தீக்ஷிதா ‘டும் டும் டும் ‘

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்லதொரு  இடத்தைப் பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண்.
 
பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரண் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
 
ஆஹா கல்யாணம் படத்துக்கு இசையமைத்த தரண், கூடிய விரைவில் கல்யாண  பந்தத்தில் இணையவிருக்கிறார்.
 
 
சென்னையை சேர்ந்த  ஆடை வடிவமைப்பாளர்  மற்றும் மாடல்  தீக்‌ஷிதாவை வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மணக்கிறார்.
 
திருமண வரவேற்பு செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. 
 
 திருமணம் குறித்து  தரண் கூறும்போது, “நான் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன.
 
இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சமீபத்தில் தான் என் 25வது படமான பிஸ்தா படத்தின் இசைக் கோர்ப்பை முடித்தேன்.
 
எல்லா தருணங்களிலும் என் குடும்பம் எனக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது. சினிமாவை பொறுத்தவரை நான் இசையமைத்த பாடல்களை பாராட்டி எழுதி,
 
என்னை ஊக்கப்படுத்தியதோடு நல்ல ஆதரவையும் பத்திரிகை, ஊடகங்கள் அளித்திருக்கின்றன” என உணர்வுப் பூர்வமாக பேசினார் தரண். 
 
மணப்பெண் தீக்‌ஷிதா பேசும்போது, “2012ல் இருந்து நான் ஒரு மாடலாகவும், நடிகையாகவும் இருந்து வருகிறேன்.
 
நகர்வலம், ஆகம் என இரண்டு தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறேன். தற்போது மாடலிங் மற்றும் விளம்பர படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறேன்.
 
மண வாழ்க்கையில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். வாழ்க மணமக்கள் ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *