விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நடிக்கும் திரைப்படம் இரும்புத்திரை. ஒரு காலத்தில் விஷாலை உதவி இயக்குனராக பயிற்றுவித்த நடிகர் அர்ஜுன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்
இதன் டீசர் வெளியீட்டு விழாவில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா , இயக்குநர் P.S. மித்ரன் , இயக்குநர் சுசீந்திரன் , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன் , இயக்குநர் திரு , நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நவீன கணிப்பொறிஅடிப்படையிலான உலகத்தில் நாம் பல்வேறு காரணங்களுக்காக நமைப் பற்றிக் கொடுக்கும் ஒவ்வொரு விவரமுமே நமக்கு எதிராக மாறும் என்பதை வலியுறுத்தி கதை அமைக்கப்பட்ட படம் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது .
அதற்கேற்ப ‘நம் வீட்டை இரும்புப் பெட்டியை திறக்க , இனி சாவி தேவை இல்லை . நாம் தரும் டேட்டா போதும்” என்ற வசனம் கவனிக்க வைக்கிறது .
நிகழ்ச்சியில் பேசிய பலரும் இயக்குனர் மித்ரனின் இயக்கத்தை ஜார்ஜின் ஒளிப்பதிவை பாராட்டினார்கள்
நிகழ்ச்சியில் பேசிய விஷால் ” இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை தயாரித்துள்ளோம்.
இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை கட்டாயம் அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது.
R.K நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக் கொண்டார்கள் . அதில் மித்ரனும் ஓருவன். ஏனெனில் மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று மித்ரன் வேண்டுதல் நிறைவேறியது.
நான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடாமல் நான் சுயநலவாதியாக ‘என்னுடைய படம்… நான் வட்டி கட்டிக்கறேன். இன்னும் ஒரு ஆறு மாதம் தள்ளி போனால் வட்டி அதிகரிக்கும். போனால் போகட்டும் ‘ என்று எண்ணி ஏப்ரல் 14 வெளியிடலாம் என்று நினைத்து இருக்கலாம்.
ஆனால் இந்த தொழில்துறை நன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்ஏ படுகிறேன். பணத்தை நான் இன்று இழந்து விட்டால் எப்போ வேண்டும் என்றாலும் சம்பாதிக்க முடியும் ஆனால் சோறு போட்ட இந்த தொழில்துறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் நான் என் குழுவோடு இணைந்து தேர்தலில் போட்டியிட கட்டாயம் ஏற்பட்டது.
வாக்குறுதிகளாக சொன்ன விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறோம். நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன இருந்தாலும் செயல்பாடுகளில்தான் நாங்கள் யாரென்று காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம். அதை நிறைவேற்ற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அணைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும். மித்திரன் இந்த கதையை எனக்கு கூறும்போது இது எனக்கு சரியான கதையாக இருக்கும் என்று தோன்றியது துப்பறிவாளன் படத்துக்கு பின்பு இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் மற்றும் சாம் இவர்கள் இணைந்த அணைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன அதை போன்று இந்த படமும் வெற்றி பெறும். எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் உமேஷ் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் . மற்றும் என்னுடைய நெருங்கிய நண்பர் யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மொத்த டீமும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம். இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6 மலேசியாவில் நடைபெற உள்ளது. . இரும்புத்திரை என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். முதல் முறையாக சமந்தாவுடன் நடித்து உள்ளேன். அவர் ஒஅழகான நபர். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரட்ச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும்.
படத்தில் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளன. என்னுடைய குருநாதர் அர்ஜுன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதும் அப்பாவிற்கு தொலைபேசியில் ‘இந்த பையன நான் ஹீரோவா ஆக்கினா இவன் என்னைய வில்லனா மாத்திட்டான் அப்படி;ன்னு சொன்னார் .
ஏன்னா , அவர் தான் எனக்கு ஊக்கம் கொடுத்து ஹீரோவாக உருவாக்கினர் செல்லமே படத்தில். ரொம்ப நன்றி அர்ஜுன் சார். ரெண்டு பேருக்கும் சண்டைக் காட்சி ஒன்று உள்ளது அதை ரெண்டு பேரும் ரொம்ப ரசித்து எடுத்துள்ளோம். படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிக சிறப்பாக அமைத்துள்ளது.” என்றார்
“இரும்பு திரை படத்தில் கதையும் , காட்சியும் உண்மையாக இருக்கும். அறிமுக இயக்குநர் மித்ரனின் இயக்கத்தில் இப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருடைய இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
நான் விஜய் சார் , சூர்யா சார் போன்ற மூத்த நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது அவர்களுக்கு மரியாதை அளித்து நடிக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்படத்தில் விஷாலுடன் நடித்தது என்னை விட வயதில் இளையவர் ஒருவரோடு நடித்தது போல் இருந்தது. ” என்றார் .