75 ஆவது சுதந்திர தினம்… 75 பாடகர்கள்…. ஜன கன மன இசைத் திருவிழா !

JR-7 நிறுவனம் , ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழு இரண்டு அமைப்புகளும்  இணைந்து இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறார்கள்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகம், உணவகங்கள், கடைகள் இடம் பெறுகிறது 

இந்நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் …..

“இந்தியாவிலேயே முதன்முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசைத் திருவிழாவாக கொண்டாட இருக்கிறோம்.75 பின்னணி மற்றும் முன்னணி பாடகர், பாடகியரும் 75 பாடல்களை பாடும் ஒரு முழு இசை நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமையும்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ‘UNITED SINGERS CHARITABLE TRUST’ என்ற அமைப்பிற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும் இது அமையும். இந்நிகழ்ச்சியின் வாயிலாக திரட்டப்படும் தொகையிலிருந்து ஒரு பகுதியை இந்த அமைப்பிற்கு உதவித் தொகையாக வழங்க உள்ளோம்.

அனைத்து துறைகளிலிருந்தும் 75 முக்கிய பிரமுகர்களை இந்நிகழ்ச்சியில் எங்களுடன் இணைந்து கொண்டாட அழைத்திருக்கிறோம்.

இந்நிகழ்ச்சியை நாங்கள் 3 பகுதிகளாக வடிவமைத்து இருக்கிறோம். காலை 10 மணியளவில் இந்நிகழ்ச்சி பிரபலங்களுடன் துவங்கி பின் திரையிசைப் பாடகர்களுடன் பகல் 12 மணிவரை நடை பெறும். அடுத்த பகுதி 3 மணியிலிருந்து 5 மணிவரையிலும், அதற்கடுத்த பகுதி மாலை 6.30 மணியளவில் தொடங்கி நள்ளிரவு 12 மணிவரையிலும் நடைபெறும். கடைசி பகுதியில் நம் திரையிசைத் துறையில் சாதித்த சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்க உள்ளோம்.

முதன்முறையாக பார்வையாளர்கள் அனைவரையும் திரையிசைத் துறையின் 75 வருடத்திற்கு முன்னோக்கி அழைத்து செல்ல இருக்கிறோம். இதன் தொடக்கமாக G.ராமநாதன் ஐயர், பாபநாசம் சிவன் மற்றும் S.M.சுப்பையா நாயுடு அவர்கள் இசையமைத்த பாடல்களில் துவங்கி, பின் M.S.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, K.V.மகாதேவன் மற்றும் V.குமார் அவர்களின் பாடல்களை பாடவிருக்கிறோம்.இந்நிகழ்ச்சியில் ‘இசை ஞானி’ இளையராஜா மற்றும் ‘இசைப் புயல்’ A.R.ரஹ்மான் அவர்களுடைய பாடல்களை தனி பகுதியாகவே பாடத் திட்டமிட்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக தேவா, வித்யாசாகர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுடைய பாடல்களை பாடவிருக்கிறோம். மேலும் இளம் இசையமைப்பாளர்களான D.இமான், அனிருத் ரவிச்சந்தர், சந்தோஷ் நாராயணன் போன்ற பல இசையமைப்பாளர்களின் பாடல்களும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறும். 

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அனைத்து பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் நம் தேசிய கீதத்தை ஒன்றாக இணைந்து பாடிய பின்பு இந்நிகழ்ச்சி நிறைவு பெறும்.

இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்களை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து அனைத்து வணிக வளாகங்கள், கடற்கரை, IT நிறுவனங்கள் இதர பொது இடங்களிலும் சிறிய நிகழ்ச்சிகள் மூலம் தொடங்கவிருக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த நம் மாநிலத்தை சேர்ந்த சாதனையாளர்களுக்கு சாதனையாளர் விருதையும் வழங்க உள்ளோம்.

இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்களையும், பிரச்சாரத்தையும் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் செய்யவிருக்கிறோம்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை BOOK MY SHOW வாயிலாகவும், PAYTM வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட விழைகிறோம்”

– என்று  குறிப்பிடப்பட்டுள்ளது 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *