‘திருச்சிற்றம்பலம்’ வெற்றியை தொடர்ந்து ஜவஹர் மித்ரனின் அடுத்த படம் ‘அரியவன்’

தனுஷ் நடிப்பில்  தான் இயக்கி வந்த திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ஜவஹர் மித்ரனின் இயக்கும் அடுத்த படம் அரியவன்.
 
அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் நடிக்கும்  இத் திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதங்களை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
 
மாரிச்செல்வன் கதை எழுத, எடிட்டிங் மா தியாகராஜன் மற்றும் ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ மேற்கொள்ள, எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வழங்குகிறது.
 
முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.
 
படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் 12-02-2023 அன்று வெளியிடப்பட்டது
 
இப்படத்தின் பாடல்கள், டீஸர் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளிவர உள்ளது.  .படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படத்தை வருகிற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முழுவீச்சில் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
படத்தின் மோஷன் போஸ்டரை பார்க்க … 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *