அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில்
ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி, ஆனந்தி இருவரும் நடிக்க,
இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு
படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் படத்தின் 4 டீசர்கள் வெளியிடப்பட்டன. நான்கும் நான்கு ரகம்
அதில் ஒரு டீசர். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் வெற்றிகரமான டாக் ஷோ-வான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை அப்படியே உல்டா செய்து ‘பேசுவதெல்லாம் உண்மை’ என்கிற தலைப்பில் டாக் ஷோ நடப்பதாகவும்
அதனை நடிகை ஊர்வசி தொகுத்து வழங்குவதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு ஜி.வி.பிரகாஷும், ஆனந்தியும் தங்களது காதல் பிரச்சினையை கொண்டு வந்து தகராறு செய்வதாகவும் கதை அமைத்திருக்கிறார்.
