”வின்சென்ட் செல்வா இல்லைன்னா நானில்லை”–நெகிழ்ச்சி மிஷ்கின்!

viru-8

விஜய் நடித்த  பிரியமுடன், மற்றும் யூத் , முரளி  நடித்த வாட்டாகுடி இரணியன், ரமேஷ் நடித்த ஜித்தன்  உள்ளிட்ட பல  குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா .

இவர் இப்போது இயக்கி இருக்கும் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும். 
 படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டன . 
வெகு ஜன இயல்பு வாழ்வில் திரை உலகப்  பின்னணியைக் கலந்து நகைச்சுவையோடு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வின்சென்ட் செல்வா என்பது முன்னோட்டததைப் பார்த்த போது தெரிந்தது . 
திரைப்பட இயக்குனராக தம்பி ராமையா நடித்துள்ளார் . 
நிகழ்ச்சியில் இயக்குனர்  மிஷ்கின் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார் . 
viru-5
இது போன்ற விழாக்களில் பேசும் வழக்கமான மிஷ்கினை இங்கே பார்க்க முடியவில்லை .  மிகவும் நெகிழ்ந்து போய் பேசினார் . காரணம் மிஷ்கின் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் . 
” என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு அடுத்தபடியாக நான் தாயாக நினைப்பது வின்சென்ட் செல்வா சாரைதான் . அவரது குடும்பத்தில் நானும் ஒருவன் . 
அவர் பாடல்களில் ஆர்வம் உள்ளவர் . யாராவது பாடினால் அவ்வளவு ஆர்வமாக கேட்பார் . நான் அவரிடம் அசிஸ்டன்ட் ஆக போனபோது என்னையும் நிறைய பாடச் சொல்வார் .
நான் கொஞ்சம் இளையராஜா சார் குரலில் பாடுவேன் . என்னை நிறைய பாடச் சொல்லி கேட்டார். நானும் பாடுவேன் 
viru-6
அப்படியே டியூன் போடுவேன் பாடல் எழுதுவேன் . 
யூத் படத்தில் கபிலன் எழுதி வந்த ஆல் தோட்ட பூபதி பாடலின் மெட்டுக்கு முதலில் பாடல் எழுதியவர் வாலி சார் தான். அதற்காக வாலி சாருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணமும்  கொடுக்கப்பட்டு விட்டது . 
அப்போதுதான் கபிலன் கொடுத்த பாடலையும் பார்த்தேன் . அந்த ‘ஆல் தோட்ட பூபதி’ என்ற வரி என்னை அசத்தியது . ‘இது வந்தால் நன்றாக இருக்கும்’ என்று  நினைத்தேன் . 
ஆனால் பாடலை மாற்ற  முடியாது . அதுவும் வாலி சார் பாட்டை  தூக்கி எறிந்து விட்டு ஒரு புதிய கவிஞரின் பாட்டை போடுவது சாத்தியம் இல்லை . 
viru-1
எனினும் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் . 
பாடகர் சங்கர் மகாதேவன்  பாட வந்தபோது நான் அவரிடம் போய் கபிலன் எழுதிய பாடலைக் கொடுத்து விட்டேன் . அவரும் பாடி விட்டார் . 
பாடலைக் கேட்க வந்த டைரக்டர் வின்சென்ட் செல்வாவுக்கும் தயாரிப்பாளருக்கும் அதிர்ச்சி . 
தயாரிப்பாளர் என்னை கன்னா பின்னா என்று திட்டுகிறார். ஆனால் டைரக்டர் அதை கூட செய்யவில்லை . எனக்கு மனசு கஷ்டமாப் போச்சு . 
ஆனா  சில நிமிடத்துக்குப் பிறகு டைரக்டர்  என் கிட்ட ‘ நீ செஞ்சது சரி”ன்னு பாராட்டினார் . 
அந்த  நொடியில்தான் நான் முதன் முதலில் டைரக்டர ஆனேன். 
viru-3
குழந்தைக்கும் சரி, டைரக்டருக்கும் சரி ….அவர்கள்கே ட்டது எல்லாம் கொடுக்கப்படவேண்டும் . எனக்கு அந்த உணர்வை தந்தவர் வின்சென்ட் செல்வா . 
அது மட்டுமல்ல .. 
எந்த ஷாட்டுக்கு எந்த லென்சை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்ற லென்சிங் அறிவில்,  அவர் ஜீனியஸ். அவரிடம் இருந்துதான் எனக்கு அது தெரிய வந்தது . 
எனக்கு சினிமாவை கற்றுக் கொடுத்தவர் அவர் . 
அவர் இல்லை என்றால்  நான் இல்லை . அவர் மீண்டும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் ” என்றார்  
வின்சென்ட் செல்வா  தனது பேச்சில்
viru-7
” மிஸ்கின் பேச்சில் நெகிழ்ந்து போனேன் . அவர்  என்னிடம் உருவானவர் என்பதில் எனக்கு ரொம்ப பெருமை உண்டு .
பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய இயக்குனரான கோடார்ட்  என்பவருக்கு இணையானவர் மிஷ்கின் . 
மிஸ்கின் சொன்னது போல இனி நிறைய படங்களை இயக்குவேன் . இந்த விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் படம் எல்லா தரப்பு ரசிகர்காளுக்கும் பிடித்த மாதிரி  இருக்கும் ” என்றார் 
வாழ்த்துகள்   வின்சென்ட் செல்வா !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *