சூர்யா வெளியிடும், விஜய் மில்டனின் ‘கடுகு ‘

kadugu 1

கோலி சோடா உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களுக்கு சொந்தக் காரரான விஜய் மில்டன் , இப்போது பரத் ராஜ குமாரன் நடிக்க,  

ஒரு முக்கியமான சமூக பிரச்னையை வைத்து உருவாக்கி இருக்கும் படம் கடுகு .

இந்த திரைப்படத்தின் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யாபாடல்கள் குறுந்தகடை வெளியிட,

ஈரோடு பெருந்துறையில் பணம் ஏதும் வசூலிக்காமல் 26 வகை உணவுகளைப் பரிமாறும் ஹோட்டல் நடத்தும் கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதி,

வைஃபை உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை,

பலவிதமான நடன அசைவுகளின் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து மக்களிடையே பிரபலம் அடைந்த, சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவார்.

 kadugu 7

இவர்களது இந்த தனிமனிதப்  பண்புகளை பாராட்டும் வகையில், கடுகு படத்தின் பாடல்கள் இவர்கள் மூலமாக வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜசேகர்  பேசுகையில், “

 “.கடுகு இந்த படம் எங்க கிட்ட வந்தது அதிஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும், நன்றி மில்டன் சார்.  படத்துல நடிச்சவங்க அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்காங்க. 

 அவ்வளவு அழகா பண்ணியிருக்காங்க, ரொம்ப ஸ்டாங்கான மெசஜை எவ்வளவு எளிமையா சொல்லனுமோ அவ்வளவு எளிமையா சொல்லியிருக்காங்க.

ராஜ்குமார், பரத், சனுஷா, பரத் சீனி எல்லோருமே சூப்பரா பர்ஃபார்ம் பண்ணியிருக்காங்க, இந்த படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும்.. நன்றி” என்றார்

 விழவில் நடிகர் பரத் பேசுகையில் :

 “என்னைக்கும் நான் சம்பளத்தை இரண்டாம் பட்சமாகத்தான் வைத்திருக்கிறேன். அதனாலா தான் பதினாலு வருஷம் சினிமாவுல என்னால நீடிக்க முடிந்தது.

kadugu 5

நான் படம் தயாரிக்கல ஆனா, தயாரிப்பாளர்களுடைய கஷ்ட்டங்களை பார்த்திருக்கிறேன், நல்ல இயக்குநர்கள் நல்ல கதைகள் வேண்டும்

இந்த பதினாலு வருசத்துல  நல்ல படங்களை கொடுக்க முயற்சி பண்ணியிருக்கேன். அந்த வகையில் இந்த படம் எனக்கு கிடைத்த நல்ல படம்.

எனக்கு இந்தக் கதாபாத்திரத்தை நம்பி கொடுத்ததற்கு  நன்றி மில்டன் சார். காதல் படத்தில் இருந்தே மில்டன் சார் எனக்கு பழக்கம். 

 நான் அவரை ஒளிப்பதிவாளராக பார்த்து, பிறகு இயக்குநராக அவர் வந்து என்னை வைத்து ஒரு படம் பண்ணார். 

பிறகு கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள, கடுகு வரைக்கும் அவரோட டிராவல பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று, 

போராடக்கூடிய கிரியேட்டர்களில் விஜய் மில்டன் சாரும் ஒருவர். ரொம்ப சந்தோஷம் சார், 

உங்ககூட 2005 ல் வந்த படமான அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது வொர்க் பண்ணினேன் , அதன் பிறகு சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பணிபுரிந்தது சந்தோஷமாக இருக்கிறது.

kadugu 9

சிங்கம் படம் பார்த்துட்டு சூர்யா அண்ணணுக்கு போன் பண்ணேன், படம் நல்லா இருந்தது சார், செம கமர்ஷியலா இருந்தது சார், என்று சொன்னேன். 

சூர்யா அண்ணே நீங்க சினிமாவுல எவ்வளவு ஃபேஷனா இருக்கிங்க என்று தெரியும். நடிக்கிறது மட்டுமில்லாம, இப்ப படம் தயாரிக்கவும் செய்றீங்க.

தரமான படங்கள் கொடுக்கணும் என்று உள்ளே வந்திருக்கீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. 

இந்த படத்தை நாலு கேரக்டர்ஸ் கதையை நகர்த்தது.

இதுல புலி வேஷம் போடுற ஒருவருக்கும், பாக்சர் ஒருவருக்கும் இடையே நடக்கும் மெண்டல் வார்,  மைண்ட் கேம்,   கண்டிப்பா இந்த படம் என் கேரியர்ல சிறந்த படமாக இருக்கும்.

ராஜகுமாரன் சார் பற்றி சொல்லியாக வேண்டும். அவர இயக்குநராக பார்த்திருப்பீங்க, ஆனா ஒரு நடிகராக அவரே பார்க்காத ஒரு ராஜகுமாரனை இந்த படத்துல பார்ப்பீங்க.

காமெடியனா சில படங்களில் பண்ணியிருக்காரு, ஆனா, ஒரு நடிகராக அவர வேறு ஒரு கோணத்தில் இந்த படம் பார்க்க வைத்தது.

kagudu 8

இந்த படத்துக்காக நெறைய உழைக்க வேண்டி இருந்தது. பிஸிக்கலாகவும் சரி மெண்டலாகவும் சரி. நிறைய உழைசசிருக்கிறாரு.

கோலி சோடா படத்தில, நாலு  பசங்க ஒரு தாதாவ அடிக்கறது கதை என்று சொன்னால் காமெடியா இருக்கும், ஆனா அதை படமாக ரொம்ப சிறப்பாக விஜய் மில்டன் காட்டியிருப்பார்.

அப்படித்தான் இந்த படத்திலையும் ராஜகுமரனுக்கும் எனக்கும் இடையே நடக்கும் மேன் டூ மேன் ஃபைட் , இந்த படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப பேசப்படும்.

அந்த அளவுக்கு உழைச்சிருக்கோம். அதற்கான பாராட்டு விஜய் மில்டன் சாருக்குதான் போகணும்.”என்றார்

ராஜ குமாறன் பேசுகையில் “:என்னை இந்த படத்துல நடிக்க விஜய் மில்டன் சார் கூப்பிட்டபோது, நான் நடிக்கிறதெல்லம் சரி சார், படம் வியாபாரம் ஆகுமா என்றேன்.

அப்ப அவர் சொன்னது…’ராஜகுமாரன் சார், நம்மை நாமே நம்பணும், நம்பல நம்ப நம்பாம மத்தவங்க நம்பணும் என்று எதிர்ப்பார்த்தா  எப்படி? .

எனக்கு நம்பிக்கை இருக்கு, நான் முதல்ல என்னை நம்புறேன் நீங்களூம் உங்கள நம்பணும் ‘என்றார். 

kadugu 4

படத்த பார்த்ததும் சூர்யா சாருக்கு பிடிச்சிருச்சி என்று சொன்னார்.  விஜய் மில்டனின் நம்பிக்கை ஜெயிச்சிருக்கு. இது ஒரு மேஜிக்தான். மிகுந்த மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

 என்னோடு  நடித்த இளம் நாயகன் பரத், எந்த காம்ப்ளக்ஸும் இல்லாமல் என்னோடு நடித்தார்.

சூர்யா சாருக்கு ரொம்ப நன்றி இந்த படத்த வெளியிட, விரைவில் வெற்றி விழாவில் சந்திப்போம்,” என்றார்

 நடிகர் சூர்யா பேசும் போது, “ 2டி எண்டர்டெயின்மெண்ட் ஆரம்பித்தது  புது அனுபவம் கொடுத்திருக்கு.

இப்பதான் வீடுகட்டியிருக்கோம். நான் அப்பா அம்மா, கார்த்தி அனைவரும் ஒரே இடத்தில இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இது அனைத்தும் சினிமா கொடுத்தது. இங்க இருக்கிற அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்  அனைவருக்கும்  சினிமாவுல வாழ்க்கை கிடைச்சிருக்கு.

சினிமாவுக்கு நாங்க திருப்பி என்ன செய்தோம் என்ற கேள்விக்கு பதில் சொல்வது போலதான் 2டி எண்டர்டெயின்மெண்ட்-ஐ நான் பார்க்குறன்.

நான் அல்லாத படங்களையும் வெளியே கொண்டு வரவேண்டும் , நல்ல படங்களையும் ஆடியன்ஸ்க்கு ரீச் பண்ண வைக்கனும்.

kadugu 2

ட்ரீம் வாரியர், பொட்டென்சியல், ஸ்டுடியோ க்ரீன் என்று இருந்தாலும் நான் நேரடியாக பண்ணனும் என்று தோனுச்சு அதனால தான் 2டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

முதலில் படம் தயாரிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தேன். பசங்க 2, 36 வயதினிலே என்று படம் தயாரித்தோம். 

என்ன தடங்கல் வந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் நடத்தி காட்டணும் என்ற எண்ணம் சின்ன பட்ஜெட் படங்களில் தான் வரும். 

எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. மறுபடியும் ஒரு கருவில் இருந்து வெளியே வந்தால் பிறகு அதுக்குள்ள போக முடியாது என்று சொல்வார்கள் இல்லையா, ஆனால் மீண்டும் அதுபோல ஒரு இடத்துக்கு போகனும் என்று எனக்குஆசை வந்தது.

அதனால் அதுபோன்ற எண்ணத்தோடு,வெறியோடு இருப்பவர்களுடன் நான் இணைந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர்களோடு இணைந்தேன்.

 படம் பார்த்தோம்  நல்ல படம்.ரிலீஸ் பண்ண முடிவு செய்தோம்.  இது ஒரு புது முயற்சி, இதற்கு நான் ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கேன். 

kadugu 6

அழகான கெமிஸ்ட்ரி நடத்திருக்கு, ஒரு இயக்குநர் தயாரிப்பாளர், இங்கு உள்ள நடிகர்கள் அனைவரும் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில்தான் தெரிவாங்க. கதாபாத்திரத்தை முன் வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும்.

அப்படி சொன்னால் எனக்கு உடனே ஈர்ப்பு வரும். அப்படித்தான் நந்தா போன்ற படங்களில் நடித்தேன். சில படங்கள் மனசார பண்ணனும் என்று தோன்றும். அந்த வரிசையில் கடுகு ஒரு படமாக தெரிந்தது.

எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்  படம் பிடிக்கும். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்திற்குள்  போய்விடுவோம். யுனிக்படத்தையார்எடுத்தாலும் ஆடியன்ஸ் சப்போர்ட் பண்ணுவாங்க,

சின்னது பெருசு என்று பார்க்காமல் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பார்கள்.பாடல்கள், பைட், காமெடி என்று அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கும்.

பரத் நடிக்க எப்படி ஒத்துக்கிட்டார் என்று எனக்கு ஆச்சர்யமா  இருந்தது. அந்த அளவுக்கு இதில்  உழைத்திருக்கார்.

நான் ஒருவரை சந்தித்தேன், அப்போது அவர் உங்களுக்கு நீங்களே மார்க் போடுங்க என்றார். அப்போது எனக்கு மற்றவர்கள் மார்க் போட்டதை காட்டிலும் நான் குறைவாக மார்க் போட்டேன்,

kadugu 3

அதைப் பார்த்த அவர், மத்தவங்க உங்களுக்கு அதிகமாக மார்க் போட்டிருக்க நீங்க ஏன் குறைவாக போட்றீங்க, என்று கேட்டார்.

உங்கள உங்களுக்கு பிடித்தால் தான் மற்றவர்களுக்கு பிடிக்கும் என்றார் .  அதுதான் இந்த படமும். பண்ணுவதற்கு காரணம்

 நல்ல படம், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும். நன்றி.”” என்றார்

வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது கடுகு .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *