வைகுண்டரை பணமாக்க திட்டமிடும் அடிகளார் – ‘அய்யாவழி’ இயக்குநர் கண்டனம்

anbu 3

நாகர்கோவில், சாமி தோப்பில் உள்ள வைகுண்டசாமிகள் குறித்து ‘அய்யாவழி’ என்ற தலைப்பில் திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.

இப்போது அவர் ”வைகுண்டசாமியை யை வைத்து பணம் சம்பாதிப்பதற்காக ஆகமத்தில் மாற்றத்தை செய்து, பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக  பிராஜாபதி அடிகள் மீது குற்றம் சாட்டுகிறார் 
”தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மமென்றும், இல்லறத்தை தவமென்றும், சாதி இல்லாத உலகை உருவாக்க திருச்செந்தூர் கடலில் ஒளி வடிவில் தரையிறங்கி,
பின்பு மனு பண்டார உருவெடுத்து, சாமி தோப்பில் ஆறு வருட தவத்தால், தன்னம்பிக்கை மனிதர்களை தயாரித்தவரே வைகுண்ட சாமி.
அம்பேத்கர், காந்தி, பெரியாருக்கு முன்பே, இந்தியாவில் அகிம்சையை ஆயுதமாக்கி திருவிதாங்கூர் சமஸ்தான மன்னனை பாமரர்களின் வியர்வைகளுக்கு மரியாதை தர வைத்தவரே வைகுண்ட சாமி.
தாழ்த்தப்பட்டவர்கள் குளித்தால், அந்த குளமும், குடித்தால் அந்த கிணறும் தீட்டென்று தலைகளை கொய்யாப்பழமாக கொய்த கலியின் உருவமான மன்னனை கண்டு,
அன்று விக்டோரியா மகராணியே கடும் அச்சமடைந்திருக்கிறார்.
ஆணின் மீசைக்கும், பெண்ணின் மார்புக்கும் வரி போட்ட திருவிதாங்கூர் மகாராஜா கும்பலை, விவேகானந்தரே, அது பைத்தியக்கார தேசம் என்று புனை பெயரில் வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.
மழை பெய்யும்போதுதான் குடைக்கு வேலை, மனிதப் பிழைகள் கூடும் போதுதானே, தெய்வத்திற்கும் வெண் கொற்ற குடைப்பிடிக்கும் அவதார வேலை.
நடமாடும் கலிகளான, நகரகத்தின் நாற்றங்கல்களான மன்னராட்சியை முடித்து வைத்து, மக்களாட்சியை மலரச் செய்ய, சிவன், பிரம்மா, விஷ்ணு மூன்றும் ஒன்றாகி, 
anbu 2
வைகுண்ட சாமியாக அவதார நிகழ்வு புவியில் அற்புதமாக அரங்கேறியது. ஒளியால் வந்த வேதனை, அன்று விழிகள் மட்டுமே காட்சிகளாக, இதயத்தில் நிரப்பிக் கொண்டன.
மொட்டைத் தலையோடு அழுத கண்களும், தொழுத கையுமாக வந்த விவேகாந்தரும், மாமரத்து நிழலில் – ஓலிக் காவியம் படைத்த, வைகுண்டரின் பெரும் பணிப் பொழிவை கண்ட பிறகுதான்,
இடுப்பில் கட்டிய துண்டை – சமத்துவ கிரீடமாக தலையில் கட்டிக் கொண்டு, காவிக்கு உலக தியான பொலிவை தந்தார்.
”உழைப்பவனுக்கே உண்ணும் உரிமை உண்டு, உழைக்காதவர் ஒருநாட்டின், வீட்டின் சாபக்கேடு” என்பார் காந்திஜி.
உழைக்காதவர்களின் முதல் போடாத முதலீடே ஆன்மீகம் என்றாகி விட்டது.
வைகுண்டசாமியை எங்கள் வம்சவளி வந்த சாணார் மூதாதையர் என்றும், எங்கள் குடும்பத்தில் பெண்ணெடுத்த இல்லறவாதியென்றும், எங்கள் நிலத்தில் பனையேறியவரென்றும்,
ஆகமங்களும், அழும் அழுகல் வார்த்தைகளை தன் இல்லத்திலிருந்து வரலாற்றை திருத்தி எழுதும் சரடுகளை சரம் தொடுத்துக் கொண்டிருக்கிறார் பிரஜாபதி அடிகளார்.
வைகுண்டசாமி பக்தர்களுக்கு கடவுள். அடிகளார் மற்றும் குடும்பத்தார்களுக்கோ அது ஏடிஎம் மிஷின்.
இந்து அறநிலையத்துறை தன் ஸ்கேனிங் பார்வைகளை சாமித்தோப்பு வைகுண்டசாமி பதி பக்கம் திரும்பும் போதெல்லாம், நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில், 
இது எங்கள் தாத்தாவின் சமாதியென்று கிளிசரின் கண்ணீரோடு மூர்ச்சையாகி விழுந்து விடுவார் அடிகளார்.
ஒரு கொலையை பத்துபேர் பார்த்தார்களென்றால், அதை நூறு விதமாகத்தான் திரித்து காட்சி படுத்துவார்கள் அது இயற்கை.
anbu 1
அடிகளாரின் இந்த ஆவணக் கொலை, எதிர் கால சந்ததிகளுக்கு இஸ்திரி பெட்டியில் தோசை சுட்டவன் அம்புலிமாமா கதை ஆகிவிடக்கூடாது. வைகுண்டசாமி கதையல்ல, நிஜத்தின் பிரகடனம்.
பகவத்கீதைக்கு இணையாக போற்றப்படும் வைகுண்டசாமி அருளிய, முக்காலத்திலும் ஒலி வேகத்தில் நிகழக்கூடியதை, ஒளி வேகத்தில் சொல்லும் ‘அகலத்திரட்டு’ அம்மானையை திருத்தி –
திருட்டுத் தனமாக பதிப்பித்ததற்காக நீதிமன்றமே அடிகளாரை அக்கிவுஸ்ட் என்று அடைமொழியோடு கெளரவித்திருக்கிறது.
அண்டத்தை படைத்து, பிண்டத்தையும் அசைக்கும் வைகுண்டசாமியின் சரித்திரத்தை, தன் குல தரித்திரமாக்கும் அடிகளாரின் செயல்பாடு, அய்யாவழி பக்தர்களின் இமைகளை உப்புகரிக்க வைக்கிறது.
தன் குடும்ப உறுப்பினர்களை டிரஸ்டுகளாக பதவி உயர்வு கொடுத்து, பொருளாதாரத்தை தொப்பை போடும் அளவுக்கு பெருக்கி கொள்ள துடிக்கும் அடிகளார் கடவுளை –
கடவுளாக இயங்க விடுவதே ‘அய்யாவழி’ அன்பர்களுக்கு செய்யும் அதிக பட்ச நன்மையாகும்.
சிவன் சொத்து குலநாசமென்றால், சிவனின் ஜீவனான வைகுண்டரை விமர்சித்ததால் அடிகளாரை வரலாறும் வலிய வந்து தகராறு செய்யும்.
ஒளியார் வந்து, ஒளியாய் சென்ற வைகுண்டசாமி மேல், அடிகளாரே – உங்கள் குழப்பங்களை பறாம் ஏற்றாதீர்.
நண்பர்களின் பிச்சையோடு, அய்யா மீது உள்ள அடங்கா இச்சையோடு நான் இயக்கி, தயாரித்த ‘அய்யாவழி’ திரைப்படத்திற்கு அன்று அடிகளார் ராயல்டி கேட்டார், தரமறுத்தேன்.
இன்று ‘அய்யாவழி’ க்கே ராயல்டி கேட்டு புனைக்கதைகளின் கூட்டணியோடு பேராசைகளின் பிதாமகனாக புதுங்கி நிற்கிறார். அடிகளாரும், இரண்டு கால கலியனின் வடிவெடுத்து விட்டார்.
anbu 4
நாணுடைமை அதிகாரத்தில் வள்ளுவர் எழுதுகிறார், ‘பிறர்நாணத் தக்கது தான்நாணானாயின் அறம்நாணத் தக்கது உடைத்து’.
இதனர்த்தம், வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால், அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.
இந்தக் கொடுஞ்செயலைச் செய்த சில கன்னடத்து மனிதர்களுக்கு, வள்ளுவன் அன்றே தெரிவித்த கண்டனத்தைவிட வேறு வார்த்தைகள் தேவையா என்ன?
அகிலத்திரட்டை திருத்தி எழுத நினைக்கும், அடிகளாரை விட்டு அறநெறி என்றோ – அகிலத்தை விட்டே ஓடிவிட்டது.
கிணற்றில் ஊரிய நிலா கரையவில்லை, கல்யானை கரும்பு தின்கவில்லை, கடின அடிகளார் அரும்பாகவில்லை.
சாபங்களை விதைக்கிறவரிடம் வரங்கள் எப்படி முளைக்கும்.
வாழ்க்கையில் விலை மதிப்பில்லா சொத்தே இந்த நொடி மட்டுமே, இந்த நொடியிலாவது அடிகளார் அரிச்சந்திரனின் அச்சனாக மாறினால்,

அர்ச்சகர்களின் நெருக்கமான சாமி தரிசனம்போல், பூமி குளிர சந்தோஷப்படுவோம்.” என்கிறார் அன்பழகன்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *