சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’.
 
சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர்  நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.
 
வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
 
நிகழ்ச்சியில் பேசிய இணை தயாரிப்பாளர்  கலையரசு.”கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம்.
 
எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால் தான் அது தயாரிப்பாளருக்கு சரியாக அமையும்.
 
இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், எங்களுக்கு கிடைத்த வரம். சின்ன படமாக இருந்த இந்த கனா,
 
சத்யராஜ் சார் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது. சத்யராஜ் சாரை எல்லோரும் கட்டப்பா என்று தான் அழைக்கிறார்கள்.
 
இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என நம்புகிறேன்.
 
விளையாட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் வீராங்கணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார்.
 
நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தால், ஐஸ்வர்யா ராஜேஷ் ரத்தம் சிந்தி வேலை பார்த்திருக்கிறார்” என்றார் 
 
“இந்தப் படத்தின் மீது எனக்கு ரொம்பவே காதல், இந்த படம் ரிலீஸுக்கு ரொம்ப நாளாகவே காத்திருக்கிறேன்.
 
ஒரு மகள் எந்த விஷயத்தை ஆசைப்பட்டாலும்  அதை தந்தை எப்பாடு பட்டாவது செய்து கொடுப்பார். இந்த படம் எல்லோருக்கும் அந்த உணர்வை கொடுக்கும்.
 
ஐஸ்வர்யா ராய் போல ஐஸ்வர்யா ராஜேஷ் புகழ் பெற வேண்டும், அந்த அளவுக்கு கடினமாக உழைத்திருக்கிறார்” என்றார் நடிகர் இளவரசு.
 
எடிட்டர் ரூபன்.பேசும்போது, “என் நண்பர்கள் அருண், சிவா, கலை ஆகியோருக்காக இந்த படத்தில் வேலை செய்திருக்கிறேன்.
 
விவசாயமும் தெரியாது, கிரிக்கெட்டும் தெரியாது நான் எப்படி இந்த படத்தை எடிட் செய்வது என்று கேட்டேன்,
 
ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் தெரியாமல் நாயகியாக நடிக்கிறார், வாங்க என அழைத்தார் அருண்ராஜா.
 
சத்யராஜ் சார் கதாபாத்திரம் மாதிரி ஒரு தந்தை இருந்தால் எல்லோருடைய கனாவும் இன்னும் சீக்கிரமே நிறைவேறும்” என்றார் 
 
“சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பில் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. கனா ஒரு விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதால் சவுண்ட் டிபார்ட்மெண்டில் நிறைய வேலை பார்க்க வேண்டியிருந்தது.
 
நிறைய சவால்கள் இருந்தன, இசையமைப்பாளர் திபு ஸ்போர்ட்ஸ் படத்துக்கு ஏற்றவாறு மிகச்சிறந்த இசையை வழங்கியிருக்கிறார் என்றார் சவுண்ட் மிக்ஸர் சுரேன்.
 
என் சினிமா ஆசையை நிறைவேற்றியது  சிவகார்த்திகேயன் அண்ணன் தான். இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
 
ஒரு நாள் திடீரென சிவா அண்ணா படத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்து விட்டு,
 
நான் நினைத்ததை விட நல்லா நடிச்சிருக்க என சொன்னார், அதுவே எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது” என்றார் நடிகர் தர்ஷன்.
 
 ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, நான் கடுமையா உழைச்சிருக்கேன்னு எல்லோரும் சொல்றாங்க.
 
கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும் தான் எனக்கு இருக்கு, ஆனால், அதை சாத்தியப்படுத்த அருண்ராஜா முதல் இந்த குழுவின் நிறைய நண்பர்கள் தான் என்னை உந்தி உழைக்க வைத்தார்கள்.
 
என்னுடைய அப்பா இருந்தால் சத்யராஜ் சார் மாதிரி தான் இருந்திருப்பார் என நினைக்கிறேன்,
 
என் அப்பா ஸ்தானத்தில் தான் அவரை வைத்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நடிகராக வருவார் தர்ஷன்.
 
தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும். எடிட்டர் ரூபன் படத்தை பார்த்து ரொம்ப நல்லாருக்குனு சொல்லிட்டார்.
 
அங்கேயே வெற்றி உறுதியாகி விட்டது. தயாரிப்பாளர் கலையரசு சார் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இன்னமும் கடுமையாக உழைத்து வருகிறார்” என்றார் 
 
நடிகர் சத்யராஜ். தனது பேச்சில், “படம் நன்றாக இருந்தால் மக்களே படத்தை கொண்டு சேர்ப்பார்கள். அதை புகழ்ந்து பேசி பயனில்லை.
 
கிரிக்கெட் தெரியாமல், அதை கற்றுக் கொண்டு நடிப்பது மிகப்பெரிய சவால். ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறார்.
 
சினிமா தெரிந்த ஒரு படைப்பாளி ஜெயிக்கும்போது அது சினிமாவுக்கு நல்லது. அருண்ராஜா காமராஜ் அப்படிப்பட்ட ஒரு இயக்குனர்.
 
விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள் எங்கு போனாலும் வெற்றி பெறும். இந்த படம் டங்கல் மாதிரி
 
சீனாவிலும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார் 
 
இயக்குனர் அருண்ராஜா காமராஜ். பேசும்போது, “சின்ன பட்ஜெட்டில் நிறைய கதைகள் எழுதியிருக்கிறேன்.
 
ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல பெரிய கதையா இருந்தா சொல்லு என்றார். 3 கதைகள் தயார் செய்தேன்,
 
அதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த கதையை அவரிடம் சொன்னேன். அவருக்கு பிடித்து போய் தயாரிக்க முடிவு செய்தார்.
 
எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதை கூட சிவகார்த்திகேயன் என்னிடம் சொல்லவில்லை.
 
நினைச்சத எடுங்க, நான் பார்த்துக்குறேன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்.
 
என்னை இயக்கியது எல்லாமே என் நண்பர்கள் தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் நான் இந்த நிலையில் இல்லை.
 
கௌசல்யா முருகேசன் என்ற பெண்ணின் வாழ்க்கை பயணம் தான் இந்த கதையை நகர்த்தி செல்லும்.
 
ஐஸ்வர்யா ராஜேஷ் உழைப்பு அபரிமிதமானது. கிரிக்கெட் மேட்சை இதுவரை சினிமாக்களில் காட்டாத வகையில், 
 
நாம் திரையில் கொண்டு வர வேண்டும் என நானும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் முடிவு செய்தோம். சத்யராஜ் சார் என்னை நிறைய தாங்கினார்.
 
எனக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்தார். வாயாடி பெத்த புள்ள பாடல் 70 மில்லியன் பார்வைகளை, 
 
கடந்திருக்கிறது என்றால் அதற்கு ஜிகேபி எழுதிய, எளிமையான பாடல் வரிகளும் தான் முக்கிய காரணம்” என்றார் 
 
இந்த சந்திப்பில் நடிகர் முனீஷ்காந்த், சவுண்ட் டிசைனர் அழகிய கூத்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *