கணம் @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிக்க, சர்வானந் , அமலா , ரித்து வர்மா, சதீஷ், திலக் ரமேஷ் நடிப்பில் ஸ்ரீ கார்த்திக் இயக்கி இருக்கும் படம் 

சிறு வயதிலேயே அம்மாவை (அமலா) ஒரு விபத்தில் இழந்த இசைப் பாடகன் ஒருவனுக்கு ( சர்வானந்) டைம் மெஷின் சயின்டிஸ்ட் ஒருவரின் (நாசர்)  தொடர்பு , பால்ய காலம் தொட்டே நண்பனாக இருக்கும் ஒரு வீடு புரோக்கரின் ( ரமேஷ் திலக் ) மூலம் கிடைக்கிறது .
 
டைம் மெஷினில் போய் அம்மாவை சந்தித்து சம்மந்தப்பட்ட  விபத்தைத் தடுத்து விட்டு நிகழ்காலத்துக்கு வந்து விட்டால் அம்மா இப்போதும் உயிரோடு காலத்துக்கேற்ற வயதான தோற்றத்தில் இருப்பார் என்கிறார் விஞ்ஞானி . ஆரம்பத்தில் தயங்கினாலும்  அம்மாவைக் காப்பாற்ற , டைம் மெஷினில் பயணிக்க முடிவு செய்கிறான் மகன்  அவனோடு வீட்டு புரோக்கர் நண்பன் மட்டுமல்ல , சிறுவயதில் தன்னைக் காதலித்த பெண்ணை தவிர்த்து விட்டு இப்போதும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் இன்னொரு நண்பனும் ( சதீஷ்) சேர்கிறான் .
 
டைம்  மெஷினில் போய் ஒழுங்காகப் படித்து  வீடு புரோக்கர் வேலையை விட பெரிய வேலைக்குப் போக வேண்டும் என்று அவன் ஆசைப்பட, சின்ன வயதில் பார்க்க அழகாக இல்லை என்று எண்ணி புறக்கணிக்க, இளம் வயதில் பேரழகி ஆகி விட்ட அந்தப் பெண்ணை அந்தக் காலகட்டத்தில் மீண்டும் சந்தித்து புறக்கணிக்காமல் பழகி காதலித்து விட வேண்டும் என்பது இன்னொரு நண்பனின் திட்டம் 
 
இவர்கள் மூலம் தான் செய்த ஒரு பழைய ஆராய்ச்சியை நிறுத்தி அதனால் செத்துப் போன நண்பனைக் காக்க வேண்டும் என்பது விஞ்ஞானியின் திட்டம் 
 
டைம் மெஷினில்  மூவரும் போக என்ன நடந்தது என்பதே  கணம். 
செத்துப் போன தன் தாயை மீண்டும் நிஜத்தில் காண ஏங்கிய இயக்குனர்  ஸ்ரீகார்த்திக் அந்த உணர்வில் இந்தக் கதையை எழுதி இருக்கிறார். 
 
வித்தியாசமான் நெகிழ்வான தாயை இழந்த எவரையும் ஒரு நிமிடம் அசைத்துப் பார்க்க வைக்கும் கதை. 
 
டைம் டிராவல் என்பதில் ஒரு மூலக் கூறு அல்லது பொருள் அல்லது கிரியேச்சர் அல்லது மனிதன் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்தான் இருக்க முடியும் . வெவ்வேறு காலகட்டத்தில் இருக்கும் அந்த அந்த  ஒரே குறிப்பிட்ட நபர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திக்க முடியாது.  டைம் டிராவல் என்ற விஞ்ஞான கான்செப்ட்  இதுதான் . 
 
மீறி சந்திக்க வேண்டும் என்றால் பிறக்கும் கணத்தில்-  அந்த ஸீரோ பாயிண்டில்தான் சந்திக்க முடியும்.  (எப்படி என்று யோசியுங்கள்) . இதை இன்று நேற்று நாளை படத்தில் ஒரு காட்சி மூலம் சொல்லி   இருப்பார் இயக்குனர் ரவிகுமார் (உண்மையில் பார்க்கத்தான்முடியுமேதவிரதொடக்கூட முடியாது )parellel universe எனப்படும் இணை உலகக் கதைகளில்தான்  ஒரே நபர் ஒரே வயதிலோ வெவ்வேறு வயதிலோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க முடியும் . 
 
ஆக டைம் டிராவல் படம் என்று கணம் படத்தை சொல்லிக் கொண்டாலும் அதை மீறிய ஒன்றை இந்தப் படத்தில் செய்து இருக்கிறார் அதுதான் இந்தப் படத்தின் சுவாரஸ்யம் புதுமை . இதுவரை பார்க்காத பல காட்சிகள் இந்தப் படத்தில் வரவும் அதன் மூலம் புதுமையான நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் மிளிரவும் காரணம் . 
 
உதாரணமாக  2020 களில் நுழையும் 1990 களின் சிறுவன் இப்போதும் பழக்கத்தில் இருக்கும் பழைய நூறு ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ” அடேயப்பா.. எவ்ளோ லாட்டரி சீட்டு” என்று கலாய்த்துத் தள்ளுவது வெடிச் சிரிப்பை வரவழைக்கிறது . 
 
இப்போது காதலிக்கும் பெண்ணை  டைம் மெஷினில் போய் சிறுவனாக சந்திக்கும் காதலன் அக்கா என்று அழைத்து கடுப்பேற்றுவது  உட்பட  பல ரகளையான நகைச்சுவைகள் ஒரு பக்கம் இருக்க , அம்மா சென்டிமெண்டில் கனம் சேர்க்கிறது கணம். 
 
இப்படியாக திரைக்கதையில் பல பரிமாணங்களைக் காட்டி இருக்கிறார் இயக்குனர். படத்துக்குத் தேவையான அம்மாவை கொண்டு வர முடியவில்லை என்றாலும் தனக்கே உரிய பாணியில் நடித்துள்ளார் அமலா . சர்வானந் மிக இயல்பான சிறப்பு. 
 
ரமேஷ் திலக் யதார்த்தம் . சதீஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் சிரிக்க வைக்கின்றன . 
 
எனினும் நடிப்பில் அசத்தி இருப்பவர் விஞ்ஞானியாக வரும் நாசர். வயதான அந்த மேக்கப் அதற்கு ஏற்ற உடல் நடுக்கம், அசைவுகள்,  குரல் என்று பிரம்மாதம் 
 
ஒளிப்பதிவு சிறப்பு 
 
ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் நெகிழ வைக்கின்றன 
 
நெகிழ்வான வித்தியாசமான கனமான படம் கணம் 
 
rating 3.5/5

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *