திகில்‌ மர்மம்‌ நிறைந்த ‘நோக்க நோக்க’

R புரடக்ஸன்ஸ் மற்றும்‌ AVP சினிமாஸ்‌ சார்பில்‌ R.முத்துக்குமார்‌ திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் ‘நோக்க நோக்க’
 
இவர்‌ தமிழில்‌ ஏற்கனவே தொடக்கம்‌, வெண்ணிலாவின்‌ அரங்கேற்றம் தெலுங்கில்‌ ஸ்ரீராமுடு, கன்னடத்தில் பிரன்ட்லி பேபி , சாக்கலேட் பாய் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
 
படத்தின் கதாநாயகனாக புது முகம்‌ அர்ஜீன்‌ சுந்தரம்‌ அறிமுகமாகிறார்‌. கதாநாயகி ஜோதி ராய். கதாநாயகன்‌ கதாநாயகி இருவரும்  நேர்மறை (anti) கதாபாத்திரங்களாக தோன்றுகிறார்கள்‌. 
கஞ்சா கறுப்பு, ஜாக்குவார்‌ தங்கம்‌, பாவனா, சிந்தியா ஜோதிராய், சுரேஷ்‌, அபி, பேபி அமுல்யா, பேபி ஜனன்யா ஆகியோர்‌ முக்கிய கதாபாத்திரங்களில்‌ நடித்துள்ளனர்‌.
 
தொலைக்காட்சி ஊடகத்தில்‌ பணிபுரியும்‌ நேர்மையான நிருபர்  பிரதிமா (ஜோதிராய்)‌ இந்தியாவில்‌ பணமதிப்பிழப்பு அறிவித்த நேரத்தில்‌ நடந்த சட்டவிரோத பண மாற்றுதலை ஆவணமாக்கி ஒளிபரப்புக்கு செல்லும்‌ வேளையில்‌ சமூக விரோதிகளால்‌ கொலை செய்யப்படுகிறாள்‌. அவளது ஒரே மகளையும்‌ கொன்று விடுகின்றனர்‌.
நாயகியின்‌ பெண்‌ குழந்தை எப்படி அந்த  கயவர்களை பேயாக உருமாறி பழிவாங்குகிறாள், கடவுள் அவளுக்கு எப்படி உதவுகிறார் என்பதே படம்  
 
இப்படத்தில்‌; இணையத்தில் கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிப்பவர்களை கடவுள் பழி வாங்குவதாக திரைக்கதை அமைத்துள்ளனர். 
 
நவீன ஸ்மார்ட் போன் உபயோகம் குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை கஞ்சா கருப்பு நகைச்சுவையாக சுட்டிக்காட்டி உள்ளார்.
 
நோக்க… நோக்க தணிக்கை செய்யப்பட்டு UA சான்றிதழ் பெற்றுள்ளது. அடுத்த மாதம்‌ திரைக்கு வருகிறது. ஒளிப்பதிவு : விஜய்‌ முத்துசாமி
 
இசை : ஆல்டிரின்‌, எடிட்டிங்‌ : அரவிந்‌த், 
 
இணை தயாரிப்பு : வெங்கட்ராமன்‌,
 
PRO: கணேஷ் ‌(9380265147)
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *