E. சிவசுப்பிரமணியன், ரூபேஷ் P லோதா & K.R. சீனிவாஸ் ஆகியோர் தயாரிக்க ,
கதை திரைக்கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து தியா என்பவர் இயக்க , அஞ்சலி ராவ் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ள படம் கன்னா பின்னா .
கன்னா பின்னா ஆவது யார் ? பார்க்கலாம்
தன்னை விரும்பும் அத்தை பெண்ணைப் புறக்கணித்து தனக்கு ஏற்ற பெண்ணை தேட முயலும் ஒருவனின் (தியா) வாழ்வில் நடக்கிற கந்தர கோலங்களே கதை .
புரோக்கர்கள் எல்லாம் அவனை தப்பான அல்லது அரை லூசுகள் நிறைந்த வீடுகளுக்கே அழைத்துப் போகின்றனர் .
முக நூலில் அக்கவுன்ட் உருவாக்கி நட்பின் மூலம் தனக்கு ஏற்ற பெண்ணை தேட முயன்றால் அதுவும் அவனுக்கு ஒத்து வரவில்லை .
கடைசியில் அவனுக்கு கல்யாணம் ஆனதா இல்லையா என்பதே படம் .
காமெடியாக வரும் என்ற நம்பிக்கையில் காமெடியாக எதையாவது சொல்ல முயல்கிறார்கள் . சொல்ல வந்தது இன்னும் அவர்களுக்கு உள்ளேயே இருக்கிறது .
சினிமாவையே கரைத்துக் குடிப்பது போல பேசுபவர்களே படம் பார்ப்போர் வயிற்றில் புளியைக் கரைக்கும்போது இவர்களைப் பற்றி எல்லாம் குறை சொல்லி என்ன பண்ண ?
பேஸ் புக் பற்றிய பாடல் நன்றாக எடுக்கப்பட்டு இருக்கிறது . அந்த குத்துப் பாட்டும் ஒகே .



