ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், டாக்டர்.கே.பாலகுமரன் தயாரிக்க,
புது முகம் அப்பு கிருஷ்ணா,முக்ஷா ஜோடியாக நடிக்க,
நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், போண்டா மணி, வெங்கல்ராவ் ஆகியோர் உடன் நடிக்க, ஸ்டன்ட் ஜெயந்த் இயக்கும் படம் முந்தல்
ஜெயந்த், அடிப்படையில் ஸ்டண்ட் இயக்குனர் . தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்கள் மட்டும் இன்றி,
ஒரு சில ஆங்கிலப் படங்கள் என சுமார் 250 படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும், பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியிருந்தாலும்,
அவரது நீண்ட நாள் விருப்பமான இயக்குநர் கனவு ‘முந்தல்’ படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது
“புற்றுநோய் விழிப்புணர்வு சம்மந்தமான சமூக அக்கறைக் கொண் கருவை வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க டிராவல் மற்றும்
ஆக்ஷன் படமாக கமர்ஷியலாக சிறப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் ஜெயந்த்
ராமேஸ்வரத்தில் தொடங்கி கேரளா, குலு மணாலி, அந்தமான், பேங்காக், கம்போடியா, வியட்நாம் என்று பல நாடுகளுக்கு பயணிக்கும்படி,
திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படம் 40 க்கும் மேற்பட்ட லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது.
முதலை, அனகோண்டா பாம்பு, மக்கள் நடமாட்டம் இல்லாத பயங்கரமான குகைகள் என்று பல சாகசக் காட்சிகள் படத்தில் இருந்தாலும்,
ஒரு இடத்தில் கூட கிராஃபிக்ஸை பயன்படுத்தாமல் அத்தனையையும் ஒரிஜினலாகவே படமாக்கியுள்ளார்கள்.
ஹீரோஅப்பு கிருஷ்ணாவுக்கு இந்த படத்திற்காக அவருக்கு இரண்டு வருடங்கள் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சண்டைப் பயிற்சி மட்டும் இன்றி
ஆழ்கடலில் நீச்சலடிக்கும் பயிற்சி, கம்பு சுழற்றுதல் மற்றும் குங்ஃபூ பயிற்சி, மனவலிமை மற்றும் உடல் வலிமை பயிற்சி என பலவிதமான கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட பிறகே,
படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அப்பு கிருஷ்ணா.. அதன் காரணமாகவே, பல அதிரடியான சாகச காட்சிகளில் டூப் போடாமல நடித்திருக்கிறார்.
படத்தின் சிறப்புகளில் ஒன்றாக, கம்போடியாவில் சோழர்கள் கட்டிய சிவபெருமான் கோவிலில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதோடு, அதிரடி சண்டைக்காட்சி ஒன்றும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது.
படம் முடிவடைந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், முதலை, அனகோண்டா பாம்பு போன்றவை இருந்தாலும்,
அவைகளை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாமல் படமாக்கப்பட்ட விதத்திற்காக பராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
யு சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து படம் வெளியாக உள்ளது.