‘கத்தி சண்டை’யில் களம் இறங்கும் வடிவேலு

kathi-8

மெட்ராஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் நந்த குமார் தயாரிக்க , விஷால் , தமன்னா , வடிவேலு , சூரி ஆகியோர் நடிப்பில் சுராஜ் இயக்கி இருக்கும் படம் கத்தி சண்டை 

எஸ் ! 
kathi-99999
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பெரிய காமெடியனாக உயர்ந்து ஹீரோவுக்கு இணையான காமெடியன் ஆகி அப்புறம் ஹீரோவாகவே உயர்ந்த  வைகைப்புயல் வடிவேலு ,
மீண்டும் இந்தப் படத்தில் ஹீரோவுக்கு இணையான காமெடியனாக களம் இறங்கி உள்ளார் . 
kathi-2
கேமியோ பிலிம்ஸ் ஜெயகுமார் தமிழகம் எங்கும் வெளியிட உள்ள இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னோட்டததையும் பாடல்களையும் திரையிட்டனர் . 
பாடல்கள் எல்லாம் கிளமராக பிரம்மாண்டமாக இருந்தன . தமன்னாவின் பிரம்மாண்டமான … நடன அசைவுகளை பார்க்க முடிந்தது . 
kathi-7
முன்னோட்டம் குடும்பப்பாங்கு காமெடி எல்லாம் கலந்து இருந்தது . வடிவேலு கலக்குகிறார் . 
நிகழ்ச்சியில் பேசிய பலரின் பேச்சும்  வடிவேலுவை சுற்றியே அமைந்தது . 
இயக்குனர் சுராஜ் பேசும்போது ”  சமூக வலைத்தளங்கள்ல எல்லாம் பங்காளி வடிவேலு வசனத்தை வச்சுதான் எல்லாமே பண்றாங்க.   நான் இந்தப் படத்தின் கதையை விஷால் சாரிடம் சொன்னபோது,
 kathi-88
‘ வடிவேலு இந்தப் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் . உங்க நண்பர்தானே கேளுங்க என்றார் . நான் கேட்ட உடன் ஒத்துக் கொண்ட பங்காளி வடிவேலுவுக்கு நன்றி.
 ஒரு நாள் நள்ளிரவு  பனிரெண்டு மணிக்கு வடிவேலு போன் செய்து வரச் சொன்னார் . போனால் ஒரு குறிப்பிட்டகெட்டப்பில் நிற்கிறார் . இது ஓகேயா என்று கேட்கிறார் .
kathi-6
அந்தக் கெட்டப்பில்தான் படத்தில் அவர் வருகிறார் ” ‘ என்றார் . 
 
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி  தனது பேச்சில்  “இந்தப் படத்துக்கு நான்தான் இசை அமைக்க வேண்டும் என்று விஷால் அண்ணன் கட்டளையே போட்டார் .
kathi-99
படத்தில் வடிவேலு சார் இருக்கிறார் என்று அறிந்த போது உற்சாகமாக  ஒப்புக் கொண்டேன் ” என்றார் . 
படத்தை வாங்கி வெளியிடும் கேமியோ பிலிம்ஸ் ஜெயகுமார் பேசும்போது
kathi-3
” விஷால் தமன்னா, சூரி  ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார் . வடிவேலு சார் இந்தப் படத்தில் நடித்துள்ளது ரொம்ப சந்தோசம் ” என்றார் . 
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தன் பேச்சில்
kathi-9 
” சுராஜ் படப்பிடிப்பு என்றால் அவ்வளவு ஜாலியாக இருக்கும் .இந்தப் படம் சிறப்பாக வந்து இருக்கிறது என்பது இப்போதே தெரிகிறது .
அதுவும் அண்ணன் வடிவேலு இருப்பது பெரும் பலம் . அண்ணன் எங்கள் படங்களிலும் நடிக்க வேண்டும் ” என்றார் . 
விஷால் பேசும்போது
kathi-999
” இந்தப் படத்தின் கதையை என்னிடம் சுராஜ் சொன்னபோது ‘ வடிவேலு அண்ணன் இந்தப் படத்தில் நடித்தால் மட்டும் இந்தப் படம் பண்ணுவேன் . இல்லன்னா வேணாம்’னு சொன்னேன் .
ஏன்னா அப்படி ஒரு லெஜன்ட் அவர் . முதன் முதலில் நானும் அவரும் திமிர் படத்தில் இணைந்தோம் . அப்புறம் நடிகர சங்கத் தேர்தலில் எனக்கு துணை இருந்தார் இப்போது இந்தப் படத்திலும் எனக்கு உதவி இருக்கிறார்.
kathi-4
எல்லோருக்கும் நன்றி .குறிப்பாக முருகராஜ் அண்ணனுக்கு ரொம்ப நன்றி  ” என்றார் . 
நிறைவாகப் பேசிய வடிவேலு ” விஷால் என்னை லெஜன்ட் என்று சொன்னார் . அதுக்கு எனக்கு சரியா அர்த்தம் கூட தெரியாது . என் வளர்ச்சிக்கு மக்கள்தான் காரணம் .
kathi-9999
எல்லாமே என் கிட்ட என்ன சார் கேப் விட்டுட்டீங்கன்னு கேட்கறாங்க . ஆனா சுராஜ்  சொன்ன மாதிரி இன்னமும்  சமூக வலைத்தளங்கள்ல எல்லாம் நம்ம வசனத்தை வச்சுதான் விளையாடுறாங்க .
ஆக எனக்கு கேப்பும் இல்ல ஆப்பும் இல்ல . 
kathi-3
நானும் விஷாலும் சேர்ந்த முதல் படம் திமிரு ஹிட் . அப்புறம் அவர் பக்கம் நான் இருந்த நடிகர் சங்க தேர்தலிலும் அவருக்கு வெற்றி . அடுத்து இந்த கத்திச் சண்டை படமும் சூப்பர் ஹிட்டு ஆகும்” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *