ஹெவன் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரபல இயக்குனர்கள்,‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் ஆகியோர் நடிக்க,
ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா ஆகியோர் நடிப்பில் ரஜாக் இயக்கி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.
ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றிக் கூறும் இயக்குனர் ரஜாக் ” வாழ்க்கையில்விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை ஒன்று வருகிறது.
இதை முடிக்க நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களால்,
நான்கு முதியவர்கள் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இதிலிருந்து நான்கு முதியவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், ‘பவர்ஸ்டார்’சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகியாக நடித்துள்ள சுவாதி நடிகை இனியாவின் சகோதரி . ரத்தீஷ் பாடகர் மனோவின் மகன். மஸ்காரா போட்டு மயக்குறனா ? பாடலுக்கு ஆடிய அஸ்மிதா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
4500 துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
பேய் பங்களா , அரசியல் எல்லாம் கலந்த படம் இது
யாருடைய மனதையும் புண்படுத்தாமல் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் ,
திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறோம்.
பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.” என்றார்







