சுசீந்திரனின் படத்தின் புதிய பெயர் ‘நெஞ்சிலே துணிவிருந்தால் ‘

IMG_0289
அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க,  
 
சந்தீப் கிஷன் ,  விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில்  சுசீந்திரன்  இயக்கிய ஒரு படத்துக்கு  அறம் செய்து பழகு என்று பெயர் வைத்து இருந்தார்கள் . இப்போது அதை மாற்றி,
IMG_0184
நெஞ்சிலே துணிவிருந்தால் என்று வைத்துள்ளார்கள் (மீனாட்சி மருத்துவமனை பற்றிய தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் அந்த அறம் செய்து பழகு என்ற வாக்கியம் வருகிறது )
 
நெஞ்சில் துணிவிருந்தால்  டைட்டில் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுசீந்திரன் , நடிகர்கள்  சந்தீப் கிஷன் , விக்ராந்த் ,துளசி ,  
IMG_0146
இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் ஜெ. லஷ்மண் , தயாரிப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இன்றைய காலத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே பாதி சொத்தை நம்மிடமிருந்து வாங்கிவிடுவார்கள்  என்று சொல்லும் அளவுக்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.
IMG_0159
” மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் ” என்போம் அதை நிஜமாக்கி வாழ்ந்து காட்டியவர் ” 20 ருபாய் டாக்டர் ”  என்று அழைக்கப்படும்  பால சுப்பிரமணியம்.
கோவை ராஜ கணபதி நகரை சேர்ந்த இவர் சிகிச்சை அளிக்க முதலில் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய் தான். நாளடைவில் ரூபாயின் மதிப்பு குறைய குறைய தனது தனது பீஸை உயர்த்தி உயர்த்தி,
 IMG_0162
20 ரூபாய்க்கு கொண்டுவந்தார். கடைசியாக ஒரு வருடத்துக்கு முன் வரை  சிகிச்சை அளிக்க  இவர் வாங்கிய தொகை 20 ரூபாய் தான்.
நாளடைவில் இவரது பெயரே மறைந்து போய் 20 ரூபாய் டாக்டர் என்று பெயர் வந்துவிட்டது.கடந்த வருடம் இவர் இறந்து  போன விஷயம் அறிந்த கோவை மக்கள்,
 IMG_0177
” ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி ” என கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினர். அந்த அளவுக்கு மிக சிறந்த மனிதரான அவரின் மகள் , மருமகன் , பேரன்  உள்ளிட்டோர்,
” நெஞ்சில் துணிவிருந்தால் ” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மருத்துவரின் குடும்பத்துக்கு மரியாதை
மருத்துவரின் குடும்பத்துக்கு மரியாதை

 ” நெஞ்சில் துணிவிருந்தால் ” படத்தின் கதைக்கும்  மருத்துவ துறைக்கும் சம்பந்தம் உள்ளது அதனால் இயக்குநர் சுசீந்திரன் இவர்களை அழைத்து கௌரவித்தார்.

 
திரைப்படத்தின் டைட்டிலை (” நெஞ்சில் துணிவிருந்தால் “) இயக்குநர் சுசீந்திரனினுடைய தந்தை நல்லுசாமி அவர்கள் வெளியிட்டார். 
 
IMG_0151
நடிகர் சூரி மற்றும் அருள்தாஸ் இருவரும் எங்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்தது சுசீந்திரன் தான் என்று நன்றி பாராட்டினர் . 
 
நமக்குப் பிறந்த குழந்தையை மருத்துவ மனையில் ஆணா  பெண்ணா என்று தெரிந்து கொள்ளவே காசு கேட்கும் உலகில் டாக்டர் பால சுப்பிரமணியம் அய்யாவின் சேவை மகத்தானது ” என்றார் சூரி . 
 
IMG_0178
“நான் பெண்ணாகப் பிறக்கவில்லையே . பெண்ணாகப் பிறந்து இருந்தால் பிரசவததையும் பார்த்து நிறைய தாய்களையும் செய்களையும் காப்பாற்றி இருப்பேனே’,
–  என்பாராம் அந்த மனித தெய்வம் ” என்று சூரி சொன்னபோது நெகிழாமல் இருக்க முடியவில்லை.
 
அப்புக்குட்டி பேசும்போது ”எனக்கு நடிகனாக ஒரு இடம் தந்து ஹீரோவாகவும் ஆக்கி வாழ வைத்தவர் சுசீந்திரன் . மறைந்த டாக்டர் பால சுப்பிரமணியம் அய்யா பார்த்த ஒரே திரைப்படம்,
 IMG_0250
நான் ஹீரோவாக நடித்து சுசீந்திரன் சார் இயக்கிய அழகர் சாமியின் குதிரை படம் என்று சொன்னார்கள். நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவில் உள்ளது ” என்றார் 
 
நடிகர் விக்ராந்த் பேசும்போது ” என்னைப் பாராட்டி துளசி அம்மா , சூரி அண்ணன் இருவரும் பேசிய வார்த்தைகள் எனக்கு இன்னும் தெம்பை தருகின்றன ” என்றார் . 
 
IMG_0188
“இந்தப் படத்தில் நடிக்க பல பிரபல நடிகர்களே தயாராக இருந்த போது , மாநகரம் படமும் வெளிவராத அந்த சூழலில் என்னை இந்தப் படத்தின் ஹீரோ ஆக்கிய சுசீந்திரன் சாரை மறக்க மாட்டேன் ” என்றார் சந்தீப் . 
 
“சந்தீப் மிக நல்ல மனிதன் என்பது மட்டுமல்ல ; சிறந்த ஞாபக சக்தி கொண்டவர் . தமிழோ தெலுங்கோ எவ்வளவு பெரிய வசனம் என்றாலும்,
 உடனே மனப்பாடம் செய்து சரியாகப் பேசி சிறப்பாக நடிப்பார் ” என்றார் சுசீந்திரன் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *