பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’

koadi-2பயாஸ்கோப பிலிம் பிரேமர்ஸ் மற்றும் ரீல் எஸ்டேட் கம்பெனி இணைந்து தயாரிக்க , சாந்தனு பாக்யராஜ், பார்வதி நாயர், தம்பி ராமையா  நடிப்பில்

 ராதா கிருஷ்ணன் பார்த்திபன் எழுதி தயாரித்து நடித்து இயக்கி இருக்கும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக . இசை சத்யா . ஒளிப்பதிவு அர்ஜுன் ஜேனா. 
படத்துக்கான விளம்பரத்தில் உதட்டை கோடுகளோடு வரைந்து , (உதட்டில் ) கோடிட்ட இடங்களை (முத்தத்தால்) நிரப்புக என்று சொல்லாமல் சொல்லும் உத்தி அருமை 
koadi-5
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டத்தை திரையிட்டனர் . 
பாடலில் சாந்தனுவும் பார்வதி நாயரும்  திணறத் திணற காதலிக்கிறார்கள் . தண்ணீரில்  தீமூட்டிக் கொள்கிறார்கள் .அவர்களின்  நட்பு , காதல் மற்றும் வாழ்வில் இருக்கும் ,
கோடிட்ட இடங்களை எது நிரப்பும்  என்பதுதான் படமாக இருக்கும் என்பது அந்தக் காட்சிகளில் இருந்து புரிகிறது.
பத்திரிகையாளர் சந்திப்புக்கான பேனரிலேயே இ _கு வரு_  தந்தி _க்கு _ ஊட _க நண்ப_களுக்கு மி _ க   _ன்றி என்ற ரீதியில் படத்தின் பெயருக்கு ஏற்ப அசத்தி இருந்தார் பார்த்திபன் 
koadi-3
நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் ” பிழைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தான் எங்களின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக…’ அந்த பிழை ஒரு காதலாக இருக்கலாம்,
அல்லது வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும்  இருக்கலாம்…. அது என்ன என்பதை ரசிகர்கள் தான் இந்த கோடிட்ட இடங்களில் நிரப்ப வேண்டும்…. 
நான் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது என்னுடைய வாழ்க்கை கோடிட்ட இடங்களாக தான் இருந்தது…. அந்த காலியான இடங்களை நிரப்பியவர் என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் சார்….
அவருக்காக சமர்ப்பிக்கும் வகையில் நான் உருவாக்கிய திரைப்படம் தான் இந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. மேலும் இந்த திரைப்படத்தில் அவருடைய மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்திருப்பது
எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவருடைய திரையுலக வாழ்க்கையில் விடுபட்டிருக்கும் இடங்களை நிரப்பும் திரைப்படமாக எங்களின்  ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ இருக்கும்...
 படத்தில் அவரும் பார்வதி நாயர் மற்றும் தம்பி ராமையா எல்லோருமே சிறப்பாக நடித்து உள்ளனர் . 
 ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் சாயல் இதில் இருக்காது. இது வேறு ஒரு வித்தியாசமான களம். இது, இளைஞர்களுக்கான படம்.
எனினும்  படம்  வழக்கம்போல உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் . 
koadi-4
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் நான்காம் தேதி நடக்கிறது . படம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளிவருகிறது
இன்னொரு முக்கிய விஷயம் .. பெரிய ஹீரோக்களின் படங்களை பண்டிகை நாளில் ரிலீஸ் செய்யத் தேவை இல்லை . ஏனெனில் அவர்கள் படம் வரும் நாட்கள் எல்லாம் பண்டிகைதான்
இனி பண்டிகை நாட்களை சிறு படங்களுக்கு தர வேண்டும் ” என்றார் 
படத்தின் வியாபாரத்துக்கான காசோலைகளின் கோடிட்ட இடங்கள் நல்ல லாபமான தொகைகளால் நிரப்பப் படட்டும் ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *