லேபர் @ விமர்சனம்

ராயல் ஃ பார்ச்சுனா கிரியேசன்ஸ் தயாரிப்பில், முத்து, சரண்யா ரவிச்சந்திரன், முருகன் ஆறுமுகம் , ஜீவா சுப்பிரமணியம் நடிப்பில் கணேஷ் குமார் படத் தொகுப்பு மற்றும்  எழுத்தில்,  நாஞ்சில் தினகர் இசையில் சத்யபதி இயக்கி இருக்கும் படம் லேபர் . 

கட்டிடத் தொழிலாளிர்களின்  வாழ்க்கையைச்  சொல்லும் படம் இது . 

இளம் கட்டிடத் தொழிலாளர் தம்பதி ஒன்றில் கணவனின் குடிப்பழக்கம் மனைவியை பெரும் துன்பங்களுக்கு ஆளாக்குகிறது . 

மேஸ்திரியாக இருக்கும் ஒருவர் தன் மகனையும் மகளையும் படிக்க வைத்து, மகனை என்ஜினீயர் ஆக்க கனவோடு போராடுகிறார். 

ஒரு திருநங்கை கட்டிடத் தொழிலாளி நன்றாக வேலை செய்தாலும் அவளுக்கு அவமானங்களுக்கு குறைவில்லை . 

வடநாட்டு இளைஞன் ஒருவன் இங்கே சென்னைக்கு வந்து கட்டிடத் தொழ்லாளியாக வேலை பார்க்கிறான் .

எல்லோரும் சீட்டு பிடிக்கும் ஒரு ஏமாற்றுத் தம்பதியிடம் கஷடப்பட்டு உழைத்த காசை கட்டுகிறார்கள் . 

எல்லோரின் வாழ்விலும் என்ன நடந்தது என்பதே இந்த லேபர் .

தொழில் நுட்ப நேர்த்தியின்மை, தேவைக்கு மேல் நீளும் ஷாட்கள் என்ற நிலையில் படம்  இருந்தாலும்  முடியும்போது படம் சற்றே மனம் கவர்கிறது என்றால் அதற்கு காரணம் கதையும் திரைக்கதையும் 

படக் குழுவினருக்கு வாழ்த்துகள் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *