மருத்துவர் ஒருவர் (பிராங்க்ஸ்டர் ராகுல்), மொபைல் போனை முழுங்கிவிட்டு சாக கிடக்கும் நோயாளியின்(அனிவீ) சோகக் கதையை கேட்கும்படியாக பாடல் அமைந்த வீடியோ பாடல் தான் இது.
பாடலின் வரிகள் 2010-ன் பாப் கலாச்சாரத்தை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது, இதில் ஹீரோ அவனது காதலை வெளிபடுத்த முடியாததை பற்றி கூறுவது போன்று எழுதப்பட்டுள்ளது.
சுரேன்.M பாடலின் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளர் அர்விந்த் கைலாசம் .
இசையமைப்பாளர் அனிவீ யுடன் அந்தோனி தாசன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார். “மயக்கிறியே” என்ற பாடலுக்குப் பிறகு இசையமைப்பாளர் அனிவீ, சரிகம உடன் இணையும் இரண்டாவது பாடல் இது.