நடிகராக வளர்ந்து வரும் மேஜிக் நிபுணர் சரவண குமார்

magic 3
மேஜிக் உலகத்தில் பிரபலமாக திகழ்பவர் சரவணகுமார், தற்போது தமிழ் சினிமாவிலும் பிரபலமாகும் விதத்தில் நல்ல குணச்சித்திர நடிகர் என்ற பெயர் எடுத்துள்ளார். 
தனது மேஜிக் நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே பிரபலமாக விளங்குபவர்  இவர் . 
இந்த ஆண்டு (2016) ஆகஸ்ட் 15 ஆம் தேதி, கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை முயற்சி மேஜிக் நிகழ்ச்சியில்,
ஐந்தே முக்கால் (5 3/4) அடி உயரம் உள்ள இவர், 3 அடி உயர குள்ள மனிதராக, தன் இரு கால்களையும் மடக்காமல் மேடையில் தோன்றி, 
மீண்டும் ஒரே விநாடியில், தனது இயல்பான உயரத்திற்கு மாறி, செய்த மேஜிக், கின்னஸ் பதிவாளர்களையும், பார்வையாளர்களையும் வியக்க வைத்ததுடன், சக மேஜிக் கலைஞர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 
magic 1
இப்படி தனது மேஜிக் மூலமாக உலக சாதனை புரிந்த சரவணகுமார், நடிப்புத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு, முதலில் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து வர, 
அவரது நடிப்பு ஆர்வத்திற்கும், திறமைக்கும் ஏற்ப வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி ’ஜாக்சன் துரை’, ‘வெள்ளிகிழமை 13ம் தேதி’ ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம்
நடிகர் மேஜிக் சரவணனன், என்ற பெயர் திரையுலகினரிடம் பரிட்சையமானது. 
இதையடுத்து ரசிகர்களிடமும் நடிகராக அவரது பெயர் பரிட்சயமாகும் விதத்தில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
magic 2
கருணாகரன் ஹீரோவாக நடிக்க, ஜியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொது நலன் கருதி’ திரைப்படத்தில் கருணாகரனின் அப்பாவாக நடித்து வரும் இவர் 
தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் ’மீண்டும் வா அருகில் வா’ உள்ளிட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேஜிக், நடிப்பு மட்டும் இன்றி, பேச்சாளர், மேடைக்கலைஞர், சமூக ஆர்வளர் என பன்முகம்  கொண்டவராக அறியப்படும்  நடிகர் மேஜிக் சரவணனனுக்கு, 
 உலக செம்மொழி தமிழ்ப் பல்கலைக்கழகம், அவரது சமூக சேவையை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *