‘திருநாளை’ ருசிக்க வைத்த ”பழைய சோறு பச்ச மொளகா”

thiru 5

கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில்,  ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான  ‘திருநாள்’ படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு  நடைபெற்றது.

நிகழ்ச்சியில்  நாயகன் நடிகர் ஜீவா பேசும்போது

 ” திருநாள் படம் ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.  இது என் வாழ்க்கையில் முக்கியமான படம்.

 நான் ‘யான்’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது ராம்நாத் இந்தக் கதையை என்னிடம் கூறினார். இது உங்களுக்காக தைக்கப்பட்ட சட்டை போல ‘டெய்லர் மேட்’ படமாக இருக்கும் என்றார்.
முதல் பாதிகதையைக் கேட்டவுடனேயே பிடித்துவிட்டது. n அப்போதே என் உள்ளுனர்வு சொன்னது இந்தப் படத்தில் நடிக்கலாம் என்று.

எல்லாமே நல்லபடியாக அமைந்தது. நல்ல படக்குழு நல்ல உள்ளுணர்வோடு சந்தோஷமாகவே நடித்தேன். 

thiru 2
என் ஒவ்வொரு படத்தையும் நன்றாக வரவேண்டும் என்று நினைத்துதான் செய்கிறேன்.  உண்மையாக  உழைக்க வேண்டும் என்று நினைத்துதான் செய்கிறோம். இந்தப் படத்திலும் அப்படித்தான் நினைத்து நடித்தேன்.

கும்பகோணத்தில் 45 நாட்களிலேயே முழுப்படத்தையும்  இயக்குநர் முடித்துவிட்டார்.  டப்பிங்கில் பார்த்தபோது வேண்டாத காட்சிகள் என்று எதுவும் இல்லை. அந்த அளவுக்கு எடிட்டிங் சென்சோடு படத்தை எடுத்திருந்தார்.

இயக்குநர் எடிட்டிங் சென்ஸ் உள்ளவர் மட்டுமல்ல மனித உணர்வுகளையும் புரிந்தவரும்கூட.

 ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் ரசிகன் நான் இதில் அவர் நன்றாக ஒளிப்பதிவு செய்திருந்தார்.  இசையமைப்பாளர் ஸ்ரீயுடன் ‘ஈ’ ,’தெனாவெட்டு’ க்குப்பிறகு எனக்கு இது மூன்றாவது படம்.
இனிமையான பாடல்களைக் கொடுத்திருந்தார். 
வீட்டில், மனைவி, அம்மா எல்லாருக்கும் பிடித்த பாடல்கள்.
thiru 4
நல்ல படத்துக்கு, நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும் என்பேன். அப்படி அமைந்த படம் இது. 
பாபி மாஸ்டருடன்’தெனாவெட்டு’ க்குப்பிறகு இதில் சேர்ந்து பணியாற்றினேன்.

 படம் பார்த்துவிட்டு கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூரிலிருந்து எல்லாம் நிறையபேர் போன் செய்தார்கள்.  எல்லாருக்கும் இதில் என் தோற்றம் பிடித்தது.

 இப்படி ஊர்ப்பகுதி மக்களுக்குப் பிடித்த படமாகவும் அமைந்தது மகிழ்ச்சி. நயன்தாராவுடன் நடித்தது எல்லாருக்கும் பிடித்து இருந்தது. பொருத்தமான ஜோடி என்கிறார்கள்.
தயாரிப்பாளர் செந்தில் குமார் சூப்பர் குட் பிலிம்ஸ் கம்பெனியில் ஒரு தூண் போன்றவர். 
அவர் தயாரிப்பில் ‘திருநாளு’க்குப் பிறகு அடுத்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’  படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த வெற்றி எதிர்காலத்தில் தரமான நல்ல படங்கள் தரவேண்டிய ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது ”என்றார்.

thiru 3

இயக்குநர்  பி.எஸ்.ராம்நாத் பேசும் போது”‘திருநாள’க்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி .நாயகன் ஜீவா சார் 63 நாட்களில் ஒரு நாளும் முகம் சுழிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தார்.
. எனக்கு படப்பிடிப்பின் போது . ‘திருநாள்’ படத்தைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. அப்போது  நயன்தாரா  ‘என்ன ராம்நாத்… உங்களுக்கு திருநாள்  படம் தவிர வேறு எதுவுமே தெரியாதா?’ என்று கிண்டல் செய்வார்.
 ‘திருநாள்’ படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழ்நாடு கேரளா, கர்நாடகா ரசிகர்களுக்கும் ஒத்துழைத்த படக்குழுவினருக்கும் நன்றி”என்றார்.

 இசையமைப்பாளர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகாந்த் தேவா  பேசும் போது, ” 

இப்படி ஒரு பெரிய படத்தில் வேறு யாராவது பெரிய இசையமைப்பாளரைத் தேடிப் போயிருக்கலாம்.  எனக்கு வாய்ப்பு கொடுத்த ஜீவா சாருக்கு முதல் நன்றி. 
thiru 1
இதுவரை குத்துப்பாட்டு இசையமைப்பாளர் என்றிருந்த இருந்த என் பெயரை  மெலடி இசையமைப்பாளர்  என மாற்றியிருக்கிறது இந்தப் படம் 
. நான் சாதாரணமாக நினைத்த ‘பங்காளி’ பாடல் பாபி மாஸ்டரின் அற்புதமான நடனத்தால் பெரிய அளவுக்கு மாறிவிட்டது. 
‘பழையசோறு பச்ச மிளகா’ பாடல்மெட்டு சாதாரணமானதுதான் .ஆனால்  வரிகளால் நல்ல பாடலாகி வெற்றி பெற்று இருக்கிறது.”என்றார்.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி,  நடன இயக்குநர் பாபி,பாடலாசிரியர் ஜீவன் மயில், 

ஜீவாவின் அடுத்த படமான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ இயக்கவுள்ள இயக்குநர் ஜே.எம். அருண் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *