பிவிபி சினிமாஸ் தயாரிக்க பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஜோடியாக சமந்தா , காஜல் அகர்வால், ப்ரணிதா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்க ஸ்ரீகாந்த் அதலா என்பவர் இயக்கத்தில் தெலுங்கு தமிழ் இரண்டு மொழிகளிலும் உருவாகும் படம் பிரம்மோற்சவம் .மிக முக்கியக் கதாபாத்திரத்தில் சத்ய ராஜ் , ரேவதி ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் துவங்கி இருக்கிறது .
மைக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்ன வேலு ஒளிப்பதிவு செய்கிறார் தோட்டா தரணி கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.
குடும்பங்களின் முக்கியதத்துவம் ,கலாச்சாரம் , உறவுகளின் அழகு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் குடும்பத்தோடு பார்க்கும் பொழுதுபோக்கு படமாக இது இருக்குமாம். படத்தில் மகேஷ் பாபு மிகவும் யதார்த்தமான மற்றும் சக்தி வாய்ந்த இரட்டை மனநிலை கொண்ட கதாபாத்திரத்தில்நடிக்கிறாராம்