மணல் கயிறு – 2 @ விமர்சனம்

manal-4
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் , எஸ் வி சேகரின் கதை திரைக்கதையில் , குடும்ப நாயகன் விசு, எஸ் வி சேகர், அஸ்வின் சேகர், ஜெயஸ்ரீ, பூர்ணா , குரியகோஸ் ரங்கா, சாம்ஸ் ஆகியோர் நடிப்பில் மதன்குமார் வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் மணல் கயிறு – 2.  இந்தக் கயிறு எவ்வளவு ஸ்ட்ராங் ? பார்க்கலாம் .

கவிதாலயா தயாரிப்பில் விசு, எஸ் வி சேகர் , சாந்தி கிருஷ்ணா நடிப்பில் விசு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி 1982 ஆம் ஆண்டு வெளிவந்து, 

பெரும் வெற்றியையும் மரியாதையும் பெற்ற படம் மணல் கயிறு. அந்த படத்தின் இரண்டாம் பாகமாக,  34 வருடம் கழித்து வந்திருக்கும் படம் இது . முதல் பாகத்தின் கதைப்படி பாதுகாப்பற்ற உணர்வு கொண்ட ஒரு வித்தியாசமான இளைஞன் கிட்டு மணி ( எஸ் வி சேகர்) தனக்கு வர வேண்டிய மனைவி,

manal-2
எப்படிப் பட்ட பெண்ணாக  இருக்க வேண்டும் என்பது குறித்து எட்டு கண்டிஷன்களை வைப்பான் . அவற்றில் பல சுயநலமாகவே இருந்தாலும்
“நான் இறந்து விட்டால் என் மனைவி இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் ” என்ற எட்டாவது கண்டிஷன் மூலம் அவனது நல்ல மனதை அறிந்து கொள்வார்  கல்யாண புரோக்கர் நாரதர் நாயுடு, அவன் கண்டிஷன்களுக்கு ஒத்து வராத ஆனால் ஒரு மிக நல்ல பெண்ணை (சாந்தி கிருஷ்ணா ) , கிட்டு மணியிடம் பொய் சொல்லி திருமணம் நடத்தி வைத்து விடுவார் .

கிட்டு மணிக்கு உண்மைகள் தெரிய வரும்போது என்ன நடந்தது என்பதே முதல் பாகம் இந்த இரண்டாவது பாகத்தில் நாரதர் நாயுடு (விசு) மீது கடும் கோபத்தில் இருக்கிறார் கிட்டு மணி . ஆனாலும் மனைவியோடு (சாந்தி கிருஷ்ணாவுக்கு பதில் ‘தென்றலே என்னைத் தோடு’ ஜெயஸ்ரீ )

manal-1
சந்தோஷமாக குடும்பம் நடத்த, அவர்களுக்கு பிறந்த மகள் (பூர்ணா ) தனது கல்யாணத்துக்கு எட்டு கண்டிஷன்கள் போடுகிறாள் . “குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்” , “கல்யாணத்தின் போதே விவாகரத்துப் பத்திரத்தில்,  தேதி இல்லாமல் மாப்பிள்ளை கையெழுத்துப் போட்டு கொடுத்து விட வேண்டும்.

அவனைப் பிடிக்கவில்லை என்றால் பயன்படுத்திக் கொள்வேன் ” என்பது உட்பட அதில் பல விபரீத நிபந்தனைகள் .கிட்டு மணி, தனது மகளின் கண்டிஷன்களை ஏற்று அதற்கு ஏற்ற  மாப்பிள்ளை தேடும் அசட்டுத்தனத்தில் இறங்க , நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த,  கிட்டு மணியின் மனைவி நாரதர் நாயுடுவின் உதவியை நாடுகிறாள் .

கிட்டு மணி கல்யாணத்திற்கு பிறகு கிட்டுமணி  மனைவியின் அண்ணன் (குரியகோஸ் ரங்கா ) பிரிந்து போய் விட , அவரின் மகனையே (அஷ்வின் சேகர் ) மாப்பிள்ளையாக ஃபிக்ஸ் செய்யும் நாரதர் நாயுடு ,

manal-3

தன்னை முன்னிலைப் படுத்தாமல் செயல்பட்டு ,கல்யாணம் செய்து வைக்கிறார்.  . மகளின் எந்த கண்டிஷனுக்கும் ஒத்துவராதவன் மருமகன் ஆன கதை கிட்டு மணிக்கும் அவன் மகளுக்கும் தெரிய வர , அப்புறம் என்ன ஆனது என்பதே இந்த மணல் கயிறு – 2

34 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த ஒரு கேரக்டரில் இப்போது மீண்டும் விசுவும் , எஸ் வி சேகரும் , குரியகோஸ் ரங்காவும் நடித்து இருப்பது அதிசய ஆனந்த ஆச்சர்யம் .

அதற்கு ஏற்றவாறு கதை திரைக்கதை அமைத்து இருக்கும் எஸ் வி சேகருக்கு அழுத்தமான கை குலுக்கல்.

கிட்டு மணியின் மருமகனின் குட்டு வெளிப்படும் நீச்சல் குளக் காட்சி அருமை எனில் , அதன் தொடர்சியாக கிளைமாக்ஸ் கல் குவாரியில் நடக்கும் நிகழ்வு கிளாஸ் . இதுதான் சார் திரைக்கதை .

கணவனும் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்வது பற்றிய அந்த  நூல் இழுக்கிற  காட்சியும் சிறப்பு .

manal-5

நாரதர் நாயுடுவாக விசுவை பார்க்கும்போது நெகிழ்வாக இருக்கிறது .மூப்பு காரணமாக உடல் மற்றும் குரலில் தள்ளாட்டம் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் .

கல்யாணத்தின் போதே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துக் கேட்பது பற்றி பேசும்போது ” எதோ ஒரு சில பெண்கள் கையெழுத்து வாங்க கஷ்டப் படறாங்க என்பதால, 

இப்படி எல்லாரும் கேட்பது நியாயமா?” என்று அவர் கேட்கும் விதம் அலாதி .

“கையில் விழுந்த  எறும்பை நசுக்காமல் பரிதாபப்பட்டு தட்டி விடும் நீ , உன் வயிற்றில் உள்ள கருவை கலைப்பது நியாயமா ?” என்று கேட்கும் விதம் அசத்தல்

எஸ் வி சேகர் வழக்கம் போல ஜோக்குகிறார் . ஜெயஸ்ரீ நடிப்பையே மறந்து விட்டார் போல . அவ்வளவு செயற்கையான நடிப்பு .

manal-6

அஷ்வின் சேகர் உற்சாகமாக நடிக்கிறார் . வாழ்த்துகள் . பூர்ணா கேரக்டருக்கு உரிய நடிப்பை தனக்கு வரும் வகையில் கொடுத்து உள்ளார் .  சாமிநாதன் சிரிக்க வைக்கிறார் . சாம்ஸ் நடிப்பு ஜஸ்ட் ஒகே ரகம்.

காட்சியின் சீரியஸை கூட கெடுக்கும் வகையில் வரும் சம்மந்தா சம்மந்தமில்லாத வசனங்கள், செயற்கையான காட்சி அமைப்புகள் ,

முக்கியமான காட்சிகளில் கூட  காமெடி என்ற பெயரில் எதையாவது பேசி சொதப்பி சவசவக்க வைப்பது ,

 அதிலும் குடும்பக் கட்டுப்பாடு தையல் பிரிவது, டாக்டர் நர்ஸ் இருவருக்கும் இருக்கும் தப்பான உறவு இருப்பது போன்ற புளித்து சலித்துப் போன விசயங்களை காமெடி என்று காட்டி கொள்வது ,

 படம் முழுக்க வளவள சலசலக்கும் வசனங்கள் , அதீத நாடகத்தனம்

இவை படத்தை பின்னோக்கி இழுக்கின்றன .

மணல் கயிறு – 2… திரிப்பில் சுரத்தில்லை !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *