கத்தி சண்டை @ விமர்சனம்

kathi-5

கேமியோ பிலிம்ஸ் சார்பில் ஜெயகுமார் வெளியிட, மெட்ராஸ் என்டர்டெய்னர்ஸ்  தயாரிக்க , விஷால் , தமன்னா  வடிவேலு , சூரி ஆகியோர் நடிப்பில் சுராஜ் இயக்கி இருக்கும் படம் கத்தி சண்டை . முடிவு எப்படி?

250 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றும் ஒரு டெபுடி கமிஷனர் (ஜெகபதி பாபு ) அதை மறைத்து விடுகிறார் .

ஆறு மாதத்துக்கு பிறகு சென்னைக்கு வரும் ஓர் இளைஞன் (விஷால்) , தனது நண்பனான ஒரு டுபாக்கூர் ரவுடியை (சூரி ) மிரட்டி,

kathi-7

தான் ஒரு பெண்ணை (தமன்னா ) காதலிப்பதாகவும் , அதற்கு உதவ வேண்டும் என்றும் கூற,

முன் ஜென்ம காதல் என்று சொல்லி நம்ப வைத்து அவளது காதலை பெறுகிறான். பணம் கொள்ளை அடித்த கமிஷனரின் தங்கைதான் அந்தப் பெண் .

காதலை போலீஸ் கமிஷனர் ஏற்றுக் கொள்ளும் போதுதான் தெரிகிறது , காதலனின் முதல் நோக்கம் காதல் அல்ல , கமிஷனர் பதுக்கி வைத்து இருக்கும் பணம் என்பது .

சி பி ஐ அதிகாரி போல வேஷம் போட்டு அவன் கமிஷனரிடம் இருந்து பணத்தைக்  கொண்டு போக , கமிஷனரிடம் ஆரம்பத்தில் பணத்தை இழந்தவன் வந்து கமிஷனரை மிரட்ட, கமிஷனர் நடந்ததை சொல்ல ,

kathi-4

அப்போதுதான் தெரிகிறது .தங்கையின் காதலன்  சிபிஐ அதிகாரி இல்லை . ஜெயிலில் இருந்தவன் என்பது .

அவனை தேடிப் போனால் ஒரு விபத்தில் அவனுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் வந்து விடுகிறது . தான்யார் என்பதே தெரியாமல் இருக்கும் அவனை குணப்படுத்த டாக்டர் பூத்ரி (வடிவேலு) வருகிறார் .

அவன் குணம் அடைந்தானா ?  அவன் நல்லவனா கெட்டவனா ? பணத்தை அவன் எங்கே வைத்திருந்தான் . ஏன் கடத்தினான் ? அதற்கான காரணம் என்ன என்பதே இந்தப் படம் .

விஷால் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் .  தமன்னா அழகாக கவர்ச்சியாக இருக்கிறார் 

kathi-3

அவரது கழுத்துக்கு மேல் கேமரா எப்போதாவதுதான் பார்க்கிறது . அந்த அளவுக்கு அவரை உரித்து உப்புக் கண்டம் போட,

அவரும் சளைக்காமல்  சிங்கிள் பீஸ்  டூ பீஸ்  எல்லாம் போட்டு பார்ப்பவர்களை பீஸ் பீஸ் ஆக்குகிறார்

முதல் பாதியில் சூரி கொஞ்சமும் , இரண்டாம் பகுதியில் வடிவேலு கொஞ்சமும் சிரிக்க வைக்கிறார்கள் .

ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவு அருமை . ஹிப் ஹாப் தமிழா இசையில் நான் கொஞ்சம் கருப்புதான் பாட்டு சூப்பர் ஹிட் .

kathi-2

கனல்கண்ணன் , தளபதி தினேஷ் , ஆக்ஷன் கணேஷ் ஆகியோரின் சண்டைப் பயிற்சிகள் ஆக்ஷன் காட்சிகள் சேசிங் காட்சிகள் அதிரவைக்கின்றன .

கிராம முன்னேற்றம் விவசாயம் என்று போகும் படத்தின் இறுதிக் காட்சிகள் அருமை .

”மக்கள் ஓட்டுக்கு காசு வாங்கறதாலதான் காசுக்கு வாங்க வேண்டிய டிவியும் மிக்சியும் இலவசமா கிடைக்குது .இலவசமா கிடைக்க வேண்டிய கல்வியும் மருத்துவமும் எட்டாக்கனியா இருக்கு” என்று, 

விஷால் பேசும் வசனம் அருமை .

kathi-1

கடைசியில் எல்லா கதாபாத்திரங்களும் விவசாயம் பார்த்துக் கொண்டு கிராம முன்னேற்றத்துக்கு உழைப்பதாகக் காட்டுவது மனசுக்கு நிறைவு .

”இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா கால் காணி  நிலம் வச்சு இருக்கறவன்தான் நிஜமான கோடீஸ்வரன்” என்று வடிவேலு சொல்வது சத்தியமான வார்த்தை .

அர்த்தம் அவசியமில்லாமல் அட்டெண்டன்ஸ் போடும் பாடல்கள் பெரிய  மைனஸ் .

kathi-6

சூரி வடிவேலு சம்மந்தப்பட்ட காமெடி காட்சிகள் பல படங்களில் அவர்களே செய்த காட்சிகளின் தொகுப்பாக இல்லாமல் ஃபிரஷ்ஷாக புதுமையாக இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

” அவன் உன்னை எவ்ளோ உண்மையா லவ் பண்றானான்னு கண்டு பிடிக்கத்தான் அவனை ஸ்டேஷன்ல வச்சு (இரத்தம் காக்க , கிட்னி வாய் வழியா வர ) அடிச்சேன்” என்று, 

டெபுடி கமிஷனர் அண்ணன் சொல்வதைக் கேட்டு தமன்னா சிலிசிலிர்த்து சந்தோஷப் படுகிறாரே .

அதை வேண்டுமானால் ‘புதுமையான வித்தியாசமான காமெடி’ என்று எடுத்துக் கொள்ளலாம் .

மொத்தத்தில் கத்திசண்டை …. பேஸ்மென்ட் ஸ்ட்ராங்தான் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *