பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோரும்  நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி இந்த வருடம் மதுரையிலும், கோவையிலும் , சென்னையிலும் நடைபெறுகிறது .
 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இசைக்கலைஞர்கள், மற்றும் பாடகர்கள் , நடனக்கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் என பலரும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி டிசம்பர் 18, மதுரையிலும், டிசம்பர் 19 கோவையிலும்  டிசம்பர் 24 முதல் 31 வரை சென்னையிலும் நடைபெறுகிறது
 
உலகப் பொதுமறை கண்ட தமிழ் நிலத்தின் வரலாற்றில் , கலைகளும் பண்பாட்டு வடிவங்களும் ஆற்றிய பங்கினை எவராலும் மறக்கவோ மறைக்கவோ இயலாது.
 
 ஒவ்வொரு நிலத்தின் சிறப்பையும், வளங்களையும், குடிகளின் வாழ்வையும் அந்நிலத்தின் பாடல்களே நமக்கு விவரித்திருக்கின்றன. 
 
இயற்கையை வணங்கி எல்லா உயிர்களும் சமம் என்ற மனங்கொண்டு , ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடி வாழ்ந்த சமத்துவ சமூகம் நம் தமிழ்ச் சமூகமே என்கிற வரலாற்று உண்மையை உரக்கச் சொல்வதே மக்கள் கலைகளின் பெருமைமிகு மாண்பாக உள்ளது.
 
கலைகளை வளர்த்தலும் பண்பாட்டு வேர்களை மீட்டெடுத்தலும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி நம்மை ஒன்றுசேர்க்கும் என்ற சமத்துவ நோக்கமே..
 
நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்வுக்கான அடிப்படை.
 
கொண்டாடுவோம் மார்கழியில் மக்களிசையை.
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *