மீண்டும் ஒரு காதல் கதை @ விமர்சனம்

meendum 4

பிளாக் டிக்கட் பிலிம்ஸ் சார்பில் எஸ்  வி டி  ஜெயச் சந்திரன் தயாரிக்க, 

வால்டர் பிலிப்ஸ்,  இஷா தல்வார்  நாசர் , தலைவாசல் விஜய் , அர்ஜுன் , வித்யு லேகா , வெங்கட் ஆகியோர் நடிக்க, 

 
மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வந்திருக்கும் படம்  மீண்டும் ஒரு காதல் கதை . 
 
mendum 7
காதலா ? சும்மா கதையா ? பார்க்கலாம்
 
அந்தஸ்து , அதிகாரம், ஆள் பலம் , பண பலம் . அரசியல் பலம் எல்லாம்  நிறைந்த ஒரு ஆர்த்தடாக்ஸ் முஸ்லிம் குடும்பத்துப் பெண் ஆயிஷாவுக்கும் (இஷா தல்வார் ) ,
 
 நடுத்தர வர்க்க – எளிமையான இந்து பையன் வினோத்துக்கும் ( வால்டர் பிலிப்ஸ்) காதல் . 
 
meendum 6
பையனுக்கு நண்பர்களும் ஒரு இன்ஸ்பெக்டரும் ஆதரவு . 
 
கட்டுப்பாடு , மதம்,  வன்முறை இவற்றை மீறி அந்தக் காதல் ஜெயித்ததா இல்லையா ? என்பதே இந்த மீண்டும் ஒரு காதல் கதை . 
 
மலையாளத்தில் பட்டையைக் கிளப்பிய தட்டத்தின் மறயத்து படத்தின் ரீமேக்  வடிவமே இந்தப் படம் 
 
meendum 5
மித்ரன் ஜவஹர் ரசித்து ரசித்து காட்சிகளை இயக்கி இருக்கிறார் . அழகு மட்டுமல்லாது கவிதையான முக பாவனைகளாலும் இஷா  தல்வார் , நிஜ காதலியை உணர வைக்கிறார் . 
 
அல்டாப் வெங்கட்டின் காமெடிகள் சிரிக்க  வைக்கின்றன .
 
குணச்சித்திர நடிப்பில் கவனம் கவர்கிறார் தலைவாசல் விஜய் .
ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் மிக இனிமை . விஸ்ணு சர்மாவின் ஒளிப்பதிவும் அழகு . 
 
meendum 3
எங்கே பிரச்னை என்றால் ஒரு மலையாளப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும்போது  அதை  தமிழ் நேட்டிவிட்டிக்கு ஏற்ற மாதிரி மாற்ற வேண்டும் . அது படத்தில் இல்லை . 
 
என்னதான்  கன்யாகுமரி பகுதியில் கதை நடப்பதாக ஒரு சப்பைக் கட்டு கட்டிக் கொண்டாலும் கூட, 
 
 மேக்கிங்கில் மலையாள நெடி ஓவர் . இது போதாது என்று பின்னணியில் மலையாளப் பாடல்களை வேறு ஒலிக்க விடுகிறார்கள் . அப்புறம் எதுக்கு ரீமேக் செய்யணும் ?
 
meendum 2
ரீமேக் படம் செய்யும் இயக்குனர்கள் எல்லாம் ஒரு முறை வான்மீகி ராமாயணத்தை படித்து விட்டு அதே சூட்டில் கம்பராமாயணத்தை படிக்க வேண்டும் 
 
எப்படி கம்பன் வான்மீகி ராமாயணத்தின் உடல் ,, உயிர் , ஆன்மா எல்லாவற்றையும் மேம்படுத்தி கம்பராமாயணம் படைத்து  இருக்கிறான் என்பது புரியும் 
 
meendum 1
எனினும் படத்தின் இரண்டாம் பகுதி படத்தை ஓரளவுக்கு காப்பாற்றுகிறது . 
 
ஆயிஷாவின் வீட்டுக்குள் இருந்து ஒரு புது மாற்றம் வருவது  அழகு 
 
அங்கே தலைவாசல் விஜய் பேசும் வசனங்கள் மலாலாவை நினைவூட்டுகின்றன . 
 
மீண்டும் ஒரு காதல் கதை … காதல் கொஞ்சம் கதை கொஞ்சம் 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *