வலம்புரி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜசேகர் தயாரிக்கும் புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப் திரைப்படம் ‘மௌன வலை’.
ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்மிருதி நாயகியாக நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில்,
மதுசூதனன் ராவ், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உபாசனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் – பாரூக் J.பாஷா, இசை – ஜாவித் ரியாஸ், தொகுப்பாளர் – பிலோமின் ராஜ், கலை இயக்குநர் – மணிமொழியன் ராமதுரை,
உடை வடிவமைப்பு – தயான் கார்த்திகேயன், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம், நடனம் – சங்கர், இணை இயக்குநர் – அந்தோணி ராஜ்,
ஒப்பனை – சுரேஷ் குமார், உடை – சாரங்கன், தயாரிப்பு நிர்வாகம் – முருகன், மக்கள் தொடர்பு – ஜான்சன், வடிவமைப்பு – ரெட் டாட் பவன்,
நிர்வாக தயாரிப்பு – கார்த்திக் சந்திரன், தயாரிப்பாளர் – S . ராஜசேகர், இயக்குநர் – பெஸ்ட் ராபர்ட்.
படத்தின் பூஜையை ஆர்கானிக் உணவு குறித்த விழிப்புணர்ச்சி விழாவாகவே நடத்தினார் ஆரி
தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் நெடுஞ்சாலை கிருஷ்ணா, நடிகர் சாந்தனு பாக்யராஜ்,
கில்டு அமைப்பின் தலைவர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோருக்கும் பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருள் பயன்பாடு இல்லாத,
பாரம்பரிய ஆர்கானிக் உணவுகள், உணவு அருந்தும் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வழங்கப்பட்டன
விஷ வேதிப் பொருள் கலப்பு இல்லாத காய்கறி மற்றும் பழங்களை ஒவ்வொரு குடும்பத்தாரும் தாமே உருவாகிக் கொள்வதோடு,
முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கும ஆரோக்கிய பாரம்பரிய காய்கறிகள் தரும் வகையில் ஆரி நடை முறைப்படுத்தி வரும்,
மாறுவோம் மாற்றுவோம் இயக்கம் பற்றிய ஆவணப் படம் திரையிடப்பட்டது .
உணவு விஷமாகும் கொடுமை பற்றியும் நமை நாமே காப்பாற்றிக் கொள்வதன் அவசியம் பற்றியும் இயற்கை உணவு விழிப்புணர்ச்சியாளர் இஸ்மாயில் மற்றும் ஆரி பேசினார்கள் .
பத்திரிகையாளர்கள், படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்கள் மற்றும் பல்வேறு துறையினருக்கும்,
ஆரோக்கிய உணவு கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை ஆரி வாசித்தார் .
சிறப்பான விழா !