அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க,
சந்தீப் கிஷன் , விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் .
வரும் 10 தேதி படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சுசீந்திரன் .
“நட்பு என்பது புரிதல் என்பதைச் சொல்ல வரும் படம் இது . ஆனால் இது நட்பு பற்றிய படம் மட்டுமல்ல . அதையும் தாண்டி ஒரு முக்கிய சமூக பிரச்னயை இந்தப் படம் பேசுகிறது .
அது வெகுஜன மக்களை கவரும் . இது நல்ல கமர்ஷியல் படமும் கூட .
நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ, அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும்.
எச்சச்ச பாடலும் ரயில் ஆராரோ பாடலும் ஹிட் ஆகி உள்ளது. இமான் சாரோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
சந்தீப் மிக நல்ல மனிதன் என்பது மட்டுமல்ல ; சிறந்த ஞாபக சக்தி கொண்டவர் . தமிழோ தெலுங்கோ எவ்வளவு பெரிய வசனம் என்றாலும்,
உடனே மனப்பாடம் செய்து சரியாகப் பேசி சிறப்பாக நடிப்பார். அதே நேரம் ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம்.

ஆனால் அவர் நடிப்பின் மூலமாகவும் அனைவரையும் ஹோல்ட் செய்கிறார்.
அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்
தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்குப் பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார்.
அதே போல விக்ராந்தும் இந்தப் படத்துக்குப் பிறகு மிக சிறப்பான இடத்தை அடைவார் .
மிகச் சிறந்த நடிகை மெஹ்ரீன் . தமிழ் தெலுங்கு இரண்டுமே தெரியாத அந்தப் பெண் இரண்டு மொழிகளையும் சிறப்பாகப் பேசி நடித்துள்ளது .
நான் இயக்கிய பத்துப் படங்களில் ஏழு படத்தில் நடித்தவர் சூரி. இந்தப் படத்திலும் மிக முக்கியக் கேரக்டரில் அசத்தி இருக்கிறார் .
இந்தப் படம் பார்த்து முடிக்கும் போது ரசிகர்கள் அனைவர்க்கும் நீட் தேர்வால் இறந்து போன அனிதா நினைவுக்கு வருவார் .
அனிதாவை இந்தப் படம் ஞாபகப்படுத்தும்” என்றார் .
சிறப்பு !