ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார், ராபர்ட், ஷகீலா, பவர் ஸ்டார், பாத்திமா பாபு, ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ்கர், நடிப்பில் வனிதா விஜயகுமார் எழுதி இயக்கி இருக்கும் படம்.
நாற்பது கடந்த பெண் (வனிதா) ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாள் . அவள் கணவனுக்கு அதில் விருப்பம் இல்லை. சண்டை பெரிதாகிறது . இருவரும் பிரிகிறார்கள் . அவள் கர்ப்பம் ஆகிறாள் . அப்புறம் என்ன ஆனது என்தே படம்.
லைனாகப் பார்த்தால் ஒன்றும் தப்பில்லை என்று சொல்லும் கதைதான். அதற்காக ‘ஸ்மெல் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான இருக்கு? அப்புறம் என்ன?” என்பதால் முள்ளங்கி சாம்பாரில் பாத்திரம் கழுவிய தண்ணீரை ஊற்றினால் எப்படி இருக்கும் . ? அப்படி இருக்கிறது படம்.
கலையை அழகை ரசிக்கும்படி காட்டலாம். சரி போகட்டும் கவர்ச்சியாகவும் காட்டலாம். அதுவும் போகட்டும் ஆபாசமாகக் கூட காட்டலாம். அதுவும் போகட்டும் பாலியல் உணர்ச்சியை அளவில்லாமல் தூன்றும் விதத்திலும் காட்டலாம் . ஆனால் அருவருப்பாகக் காட்டினால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறது படம்.
நான் ஏண்டா எங்களை உங்களுக்கு அழகாகக் காட்டணும்? வாந்தி வர்ற மாதிரி காட்டறேன் . பாக்க வந்தவங்க எல்லாம் சாகுங்க என்று சொல்லாமல் சொல்வது போல காட்சிகள் வசனங்கள் நடிப்பு
கடைசிக் காட்சியில் மனைவியின் பிரசவத்தை கணவன் நேரில் பார்த்து சிலிர்ப்பது போல காட்சி வைத்தால் எல்லாம் சரியாகி விடுமா? ஒரு டன் குப்பையை கழுவ ஒரு கிராம் பிளீச்சிங் பவுடர் போதுமா?
மொத்ததில் மிஸ்டர் ஆண்டு மிசஸ்… இருட்டான அழுக்கு லாட்ஜ் கப்புள்
