முந்திரிக்காடு @ விமர்சனம்

ஆதி திரைக்களம் தயாரிப்பில் சீமான், புகழ், சுபப்ரியா மற்றும் பலர் நடிப்பில் எழுத்தாளர் இமையத்தின் கதைக்கு திரை எழுத்து எழுதி களஞ்சியம் இயக்கி இருக்கும் படம். 

 
முந்திரிக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள – காதல் கல்யாணத்துக்கு எதிராக உள்ள சாதி வெறியால்-  பலர்  கொடூரமாக கொல்லப்படுகின்றனர் . இந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண் ஒருத்திக்கும்  (சுபப்ரியா)  காவலர் பயிற்சிக்குப் போக இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி  இளைஞனுக்கும் (புகழ்) இருக்கும் நட்பை காதலாக நினைத்து பிற்படுத்தப்பட்ட சாதி ஆட்கள் இருவருக்கும் பல விதமான கொடுமைகள் செய்ய , அது உண்மைக் காதலாகவே மாற, மேலும் கொடுமைகள் தொடர என்ன நடக்கிறது என்பதே படம். 
அந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரியின்  (சீமான்) நினைவு கூறலாக பயணிக்கும் படம், நடந்ததையும் காவல் அதிகாரி நடக்க வேண்டும் என்று விரும்பியதையும் சொல்லும் இடத்தில் பாராட்டுப் பெறுகிறது. 
 
காதலர்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகளை அழுத்தமாகப் படமாக்கி இருக்கிறார் களஞ்சியம் . புகழ், சுபப்ரியா மிக சிறப்பாக நடித்துள்ளனர் . சுபப்ரியாவின் குரலும் உணர்வுப் பூர்வமும் அருமை . 
 
காட்சிகளுக்கு ஏற்ப கனலும் ஒளிப்பதிவை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சிவ சுந்தர் 
 
அடுத்தடுத்து திருப்பங்களுடன் பயணிக்கிறது படம். 
சாதி அவமானத்தை ஒழிக்க கிராமப்பகுதியில்  உள்ள தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்  எல்லாம் நகரத்துக்கு வந்து விடுங்கள் என்கிறார் களஞ்சியம்.   வந்து? சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் விவசாயம் செய்யலாமா? படித்து வேறு வேலைகளுக்கு போங்க என்கிறார் களஞ்சியம். அப்போ விவசாயத்தை முற்றாக ஒழித்து விடலாமா? கிராமங்கள் வரை சாதி ஒழிக்கப்பட வேண்டும்  என்பதுதானே நோக்கமாக இருக்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் இன்று சாதியின் கோரப் பற்கள் ஒருபுறம் விரிந்து கொண்டுதானே இருக்கின்றன. 
 
இப்படி குறைகள் இருந்தாலும் சாதிய ஆணவத்துக்கு எதிரான அழுத்தமான பதிவு இந்தப் படம் . 
 
அப்புறம் … வேணாம் போதும் … படம் சுமார் மூன்று மணி நேரம் ஓடுது . நாமாவது விமர்சனத்தை சுருக்கமாக முடிப்போம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *