மதுக்கடை மற்றும் BAR தொல்லையால் கதறும் பழவேடு மக்கள்

ஒரு காலத்தில் குடித்து விட்டு ஊருக்குள் வருவதே அவமானமாகப் பார்க்கப்பட்ட தமிழ் நாட்டில் இப்போது குடிப்பழக்கம் இல்லாதவனை எகத்தாளமாகப் பார்க்கும் பழக்கம் வந்து விட்டது . 

ஒரு தவறை சாதாரண மனநிலையில் செய்பவனை அதிகம் தண்டிக்கும் வழக்கம் இருந்த நம்ம ஊரில் இப்போது குடிகாரர்கள் செய்யும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு வாழும் சூழல் .  காரணம் மதுப் பிரியர்களுக்கு எதிராகப் புகார் செய்பவரை முறைத்துப் பார்க்கும் நிலைமை . 
அப்படி ஒரு நிலைமைதான் இங்கேயும் ?

இங்கேயும் என்றால் எங்கே?  

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள  பழவேடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கும் அதை ஒட்டிய பாரும்  (BAR) இருபத்தி நான்கு மணிநேரமும் இயங்குகிறதாம் . 

அங்கு குடிப்பவர்கள் வேண்டுமானால் தள்ளாடலாம் . மயங்கலாம் . ஆனால்  டாஸ்மாக்கும் பாரும் இரவு பகல் பாராமல் தொடர்ந்து தள்ளாடாமல் மயங்காமல் இயங்கி வருவதாக சொல்கின்றனர் .  (அரசு கஜானாவை குடிமகன்களின் ரத்தம் ஊற்றி நிரப்ப அல்லும் பகலும் உழைக்குதோ என்னவோ ?)

“பாருக்கு ஒரு பக்கம் நூறு மீட்டர் தொலைவில்தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது . மறுபக்கம் ஐம்பது மீட்டர் தொலைவில் குடி இருப்பவர்கள் படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல.  மது அருந்தி விட்டு கலாட்டா செய்பவர்களால் பல தொல்லைகளுக்கு ஆளாகிறோம் . போலீசில் புகார் செய்தும் பலன் இல்லை ” என்று கண்ணீர்க் குரல்கள் . (அரசுக்கு வருவாய் வரும் திட்டத்துக்கு எதிராக செயல்படுவதாக சொல்லி  BARக்காரர்கள்  மக்கள் மீது புகார் சொல்லி காவல்துறை அவர்களைக் கைது செய்யாமல் இருந்தால் சரி )

இது நமக்கு புகைப்படங்களோடும் ஒரு காணொளியோடும்  வந்த தகவல். 

ஒருவேளை இது உண்மை எனில் இதைப் பற்றி விசாரித்து அரசு நடவடிக்கை எடுப்பது நல்லது . 

அரசுக்கு குடிமகன்கள் முக்கியமாக இருக்கலாம் . ஆனால் கொஞ்சமாச்சும் குடிமக்களும் முக்கியம்தானே?

ஏதோ அந்தக் காலத்தில் ஊருக்கு பழவேடு என்று பெயர் வைத்து விட்டார்கள் . அதற்காக மக்களை எப்போதும் புளித்துப் போன பழ நாற்றத்தில் முக்கியடிப்பது என்ன நியாயம்?

காணொளி கீழே 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *