நகர்வலம் @ விமர்சனம்

nagar 6
எம் நடராஜன் தயாரிப்பில் பாலாஜி , தீக்ஷிதா மாணிக்கம் , யோகி பாபு, பால சரவணன் ஆகியோர் நடிக்க, மார்க்ஸ் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் நகர்வலம். வலம் வரலாமா  ? பார்க்கலாம் .

தண்ணீர் லாரி ஓட்டும் குமார் (பாலாஜி) . அவனது நண்பர்கள்.தங்கராசு , ஜகா (முறையே யோகி பாபு, பால சரவணன்)

ஜனனி என்ற பெண்ணுக்கும் (தீக்ஷிதா மாணிக்கம் ) குமாருக்கும் காதல் . ஜனனியின் அண்ணன் கர்ணா (முத்துக் குமார்) சாராய பார் மற்றும் கட்டப் பஞ்சாயத்து நடத்தும் ரவுடி .

nagar 5
அதனால் அப்பாவால் (மாரிமுத்து) குடும்பத்தில் இருந்து விலக்கப் பட்டவன். ஆனால் அரசியல்வாதியாக இருக்கும் சித்தப்பாவுக்கு (டி.ரவி) ஆதரவானவன்

கர்ணாவின் நம்பிக்கைக்குரிய சக ரவுடி மாரி (அஞ்சாதே ஸ்ரீதர்) . அரசியல்வாதி சித்தப்பா ஜாதி வெறி பிடித்தவர் .

ஒரு நிலையில் குமார் ஜனனி காதல் குடும்பத்துக்கு தெரியவருகிறது . எல்லோரும் அதை எதிர்க்க , கர்ணா குமாரை அடித்து நையப் புடைக்கிறான்.

nagar 9

ஆனால் ஜனனியின் வற்புறுத்தல் காரணமாக காதலை ஏற்கிறான் .  ஒரு நிலையில் ஜனனியின் பெற்றோரும் அதை ஏற்க, அரசியலவாதி சித்தப்பா மட்டும் ஏற்க மறுக்கிறார் .

குமார் , ஜனனியை அவர் கொல்ல முயல,  இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் கர்ணா , ஜனனிக்கு துணையாக மாரியை அனுப்பி வைத்து விட்டு குமாரை அழைத்து வர கர்ணா கிளம்ப,

எதிர்பாராத மழையால் கர்ணா ஒரு இடத்திலும் , குமார் ஒரு இடத்திலும் , ஜனனி- மாரி இருவரும் ஒரு இடத்திலும் சிக்கிக் கொள்ள ..

nagar 1

அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் .

நடிகர் பசுபதி கெஸ்ட் ரோலில் வந்து ஒரு பாட்டுக்கு ஆடி விட்டுப் போகிறார் .

அந்தப் பாடல் பேசும், சென்னையின் பூர்வகுடிகளுக்கு இழைக்கப்படும் துரோகங்களுக்கு எதிரான  அரசியல் போற்றுதலுக்குரியது (பாடலாசிரியர் மோகன்ராஜ் )

பாலாஜி பல வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் . ஆள் அப்படியே இருக்கிறார் (இது பாராட்டு மட்டும் அல்ல )
தீக்ஷிதா ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போகிறார் .

nagar 7

யோகி பாபு, பால சரவணன், நமோ நாராயணன் ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள் .

அவ்வப்போது பின்னணியில் வரும் இளையராஜா பாடல்கள் அருமை . குறிப்பாக சென்யூரீட்டா பாடல் . கேட்டே ரொம்ப நாள் ஆச்சு .

இன்னும் அழுத்தமான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை தேவைப்படுகிறது .

கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருப்பது மட்டும் முக்கியம் அல்ல . அதுவரை சொன்ன படத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் .

nagar 99

தண்ணீர் லாரி ஓட்டுனர் என்ற கேரக்டரை வைத்து பல்வேறு விசயங்களை சீரியசாக காமெடியாக பேச முடியும் . ஆனால் பேசவில்லை .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *