சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு தயாரிக்க, ப்ளூ பிளானட் எண்டர்டெயினர்ஸ் இணைந்து தயாரித்திருக்க,
ராணா – காஜல் அகர்வால் நடிப்பில் தேஜா இயக்கத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியாகும் படத்தின் தமிழ் வடிவத்துக்கு நான் ஆணையிட்டால் என்று பெயர் வைத்துள்ளனர் .
சிவாஜி சந்தானம், மயில்சாமி, ஜெகன் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். பாடல்கள் வைரமுத்து . படத்தின் பெரும்பாலான காட்சிகள் காரைக்குடியில் படமாக்கப் பட்டிருக்கின்றனவாம் .
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படம் பற்றிக் குறிப்பிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, ” இன்றைய சமகாலஅரசியல் – ஒரு பாரம்பரியமான குடும்பம்.
இரண்டும் இணைவது தான் இந்த நான் ஆணையிட்டால் படம் .
தெலுங்கில் நாங்கள் எடுத்த படத்தின் தமிழ் ரீமேக்தான் எம்ஜி ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை தெரிந்தோ தெரியாமலோ எதிர்பாராத விதமாக,
அந்தப் படத்தில் இடம் பெற்று சரித்திரம் படைத்த பாடலின் முதல் வரியை இப்போது இந்தப்படத்திற்கு, நான் ஆணையிட்டால் என்று தலைப்பாக வைத்திருக்கிறோம்.
(நான் ஆணையிட்டால் என்ற பெயர் கொண்ட ஒரு படத்தில் எம்ஜிஆரே அப்போது நடித்து உள்ளார் அய்யா. அதுவும் வெற்றிப் படம் )
அதுமட்டுமில்
நான் ஆணையிட்டால் படத்தை வெளியிடுவதைப் பெருமையாக நினைக்கிறோம்..” என்றார்.
ராணா பேசும்போது ” பாகுபலிக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு அபரிமிதமானது . அதில் வில்லனாக நடித்து உங்கள் அன்பைப் பெற்ற நிலையில் இதில் ஹீரோவாக வருகிறேன் .
இந்தப் படத்துக்கும் இனி எல்லாப் படங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை ” என்றார்
படத்தின் போஸ்டர்களுடன் செல்போனில் புகைப்ப்படம் எடுத்துக் கொண்டு, அதிலுள்ள செயலியுடன் பார்த்தால், சம்பந்தப் பட்ட நடிகர்கள் உங்களுடன் நிஜமாக நிற்பது போன்ற அனுபவத்தைப் பெறலாமாம்.
எல்லாப் படமும் நல்ல படமா உருவாக செயலி எதுவும் உண்டா ?




