செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் : TD ராஜா மற்றும் TR சஞ்சய் குமார் தயாரித்திருக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் இந்தப் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார்.
படத்தின் நாயகியான ஹரிப்ரியாவிற்கு ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம், செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இரண்டாவது, மற்றும் தமிழில் நான்காவது திரைப்படம் . கர்நாடகத்தை சேர்ந்த இவர், இதற்கு முன்பாக ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’ மற்றும் ‘வாராயோ வெண்ணிலாவே’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
படத்தில் சசிகுமார் ஒலிப் பொறியாளராக நடித்துள்ளார். ஒருவனின் வாழ்க்கையை எவ்வாறு ஒலி மாற்றுகிறது என்பதே படத்தின் திருப்புமுனையாக அமையும், என்று இயக்குனர் சத்ய சிவா தெரிவித்துள்ளார்.

நாயகன் சசிகுமார் ” ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்வில் நடக்கும் கசப்பான சம்பவங்களால் எவ்வாறு ஒரு மிருகமாக மாறுகிறான் என்பதே கதை. இப்படத்தின் தலைப்பு, திரைக்கதைக்கு பொருத்தமாக இருக்கும். படத்தில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும்.
எனது போராட்டம் மற்றும் வலி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனாலே நான் திரைப்படங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றேன். வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல! எல்லாம் மாறும்! அதனை நான் இப்போது புரிந்து கொண்டேன் பக்குவம் மற்றும் நிதானம் தான் மிகவும் முக்கியமானது. ஓடிக்கொண்டே இருப்பது வாழ்க்கை அல்ல. நிதானமாக பிடித்தவற்றை செய்வது மிகவும் முக்கியமானது
இப்போது பொன்னியின் செல்வன் , பாகுபலி எல்லாம் பார்க்கிறோம் ஆனால் நான் ஈசன் படம் முடித்தபோதே ஒரு வரலாற்றுப் படத்தை இயக்க திட்டமிட்டேன் . அப்போது பட்ஜெட் பெரிதாக இருந்ததால் முடியவில்லை. விரைவில் மீண்டும் படம் இயக்குகிறேன் .

மதுரை எனது சொந்த ஊர். நான் எனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறேன். மேலும் எனது திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் மதுரையை சார்ந்த பகுதிகளில் நடைபெறுகிறது. அங்கு தங்கி இருப்பது மிகவும் எளிதாக உள்ளது.
மதுரையிலேயே டப்பிங் ஸ்டூடியோ இருப்பதனால், என் கிராமத்தில் தங்கி வேலை செய்வது எனக்கு மிகவும் சவுகரியமாக உள்ளது. எனவே சென்னைக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே நான் வருவேன் இது ஒன்றும் புதிய விசயமில்லை. மலையாளத்தில் நிறைய இயக்குனர்கள், நடிகர்கள் சிந்த ஊரில்தான் இருக்கிறார்கள். படப்பிடிப்பு சமயத்தில்தான் ஒன்று கூடுகிறார்கள் “என்கிறார்
“எனது கன்னட திரைப்படமான ‘பெல் பாட்டம்’ கண்ட இயக்குனர், எனக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார். படத்தின் கதை நன்றாக இருந்ததால் உடனடியாக ஒப்புக் கொண்டேன். படத்தில் நான் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில், கணவன் மற்றும் குழந்தையை பாதுகாக்கும் ஒரு எதார்த்தமான இல்லத்தரசியாக நடித்துள்ளேன்

சசிகுமார் சார் நடிகர் மட்டுமல்லாது இயக்குனராகவும் இருப்பதனால், அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் மற்றும் நுணுக்கங்கள் கற்றுக் கொண்டேன். மேலும் தமிழில் மீண்டும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” தமிழிலிருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்ததற்கு, கன்னடத்தில் நான் பரப்பரப்பாக இருந்ததே காரணம். தமிழில் கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்,” என்கிறார் ஹரிப்ரியா
நான் மிருகமாய் மாற படத்தின் ஒளிப்பதிவை ராஜா பட்டாச்சார்ஜி செய்துள்ளார், மற்றும் ஸ்ரீகாந்த் NP, படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
படத்திற்கான தணிக்கை சான்றிதழ் விரைவில் வழங்கப்பட்டு, இந்தத் திரைப்படம் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பக் குழுவினர்
கலை இயக்குனர்: உதயகுமார்
சண்டைக் காட்சி: மகேஷ் மேத்யூ
இணை இயக்குனர்: சிவராமகிருஷ்ணா பி
ஆடை வடிவமைப்பாளர்: சங்கர்
ஒப்பனை: மாரியப்பன்
ஒளி வடிவமைப்பாளர்: பிரதாப்
படங்கள்: முருகன் மற்றும் மணி
விளம்பர வடிவமைப்பு: சிந்து கிராபிக்ஸ்
VFX: வி கோர் ஸ்டுடியோஸ்
இணை இயக்குனர்கள்: நிகேஷ் R மற்றும் மணிகண்டன் V
நிர்வாக தயாரிப்பாளர்: பாண்டியன் P
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹமத்
ஆடியோ லேபிள்: திங்க் மியூசிக் இந்தியா
சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட் நிறுவனம் படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகளை கைப்பற்றியுள்ளது.