
அடுத்து, திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை மன்னன் நாகேஷின் பெயரில் இயக்கி இருக்கும் படம் ‘நாகேஷ் திரையரங்கம்
அகடம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நௌஷத் ஒளிப்பதிவு செய்ய, கபாலி படத்தின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர், படத்தின் முதல் தோற்றத்தை இயக்குனர்கள் அமீர் மற்றும் கரு.பழனியப்பன் வெளியிட பாடல்களை சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்டார்.
பாடலாசிரியர் முருகன் மந்திரம் தன் பேச்சில் , ” நான் இந்தப் படத்தில் எழுதிய பாடல் டாஸ்மாக் பாடல் . திண்டிவனத்தில் எங்களோடு ஷூட்டிங்ல இருந்த ஆரி சாருக்கு வந்தது, இடி மாதிரி ஒரு செய்தி…. அவங்க அம்மா இறந்துட்டாங்க !
ஒரு மனுசனுக்கு உச்சபட்ச அன்ப கொடுக்க கூடிய ஒரே ஜீவன் அம்மா மட்டும்தான். சாகுற அளவுக்கு கஷ்டம் வரும்போது நாம சாய நினைக்கிற ஒரே மடி அம்மா மடிதான்
தகவல் எங்களுக்கு தெரிஞ்சதும் நாகேஷ் திரையரங்கம் படத் தயாரிப்பாளர் , நான் \என மொத்த டீமும் ஆரி சாரை உடனே கிளம்பச் சொன்னோம்.
அப்படி கிளம்ப சொன்னாலும் எல்லாருக்கும் ஒரு விஷயம் நல்லா தெரியும்..
அதுதான் படத்தோட கடைசி நாள் ஷூட்டிங். பகல் 2 மணி கால்ஷீட்டா ஆரம்பிச்சு மறுநாள் வரைக்கும் படப்பிடிப்பு நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம்.
இல்லன்னா ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் சார், திண்டிவனம் கண்ணையா தியேட்டரை நாகேஷ் திரையரங்கமா மாத்திப் போட்ட செட்டும்,
ட்ரான்ஸ் இண்டியா நிறுவனம் இந்த ஒருநாள் ஷூட்டிங்குக்காக அள்ளி இறைத்த காசும் வீணா போயிடும்.
கஷ்டமான சூழ்நிலையிலும் பிறர் கஷ்டத்த நினைச்சி தன் கஷ்டத்த ஏத்துக்கிறவன் ரொம்ப பெரிய மனுசன். ஆனா ஆரி சார் ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய மனுசன்.
எக்காரணத்தக் கொண்டும் சூட்டிங் நிக்கக் கூடாதுன்னு நினைச்சவரு, தன் அம்மாவோட சடங்குகளை தள்ளி வச்சிட்டு நடிச்சிக் கொடுத்தார்.
எனக்கு ரீடேக் சொல்லத் தோணாத போதும், ஷாட் நல்லா வராத போது ஒன்மோர் போலாம் சார்னு ஆரி சாரே, தொழிலை அம்மாவின் இடத்துல வச்சார்.
வேலை பாக்குற எங்களுக்கு ஒரே குற்றவுணர்வு..இந்த நேரத்துல இவரை கஷ்டப்படுத்தணுமான்னு.
“எனக்கு கிடைச்ச இந்த நடிகன் வாழ்க்கை என் அம்மா ஆசைப்பட்டது. இப்ப இதை நஷ்டத்தோட விட்டுட்டு போனேன்னா என் அம்மாவோட ஆன்மா என்னை மன்னிக்காது”ன்னு அவரே சொல்லி,
சூட்டிங் முடியுற வரைக்கும் கில்லியா நின்னார். மொத்த யூனிட்டும் நெருப்பா வேலை செஞ்சி அவரை சீக்கிரம் அனுப்பி வச்சோம். ஆரி சார் கார் பழனி நோக்கி பறந்தது.
அதுவரை அவர் அம்மாவோட ஆன்மா படப்பிடிப்பு தளத்திலேதான் இருந்தது. இப்படி பலரின் உழைப்பிலும் இழப்பிலும் தியாகத்திலும் உருவான படம் இது .
வரும் வெள்ளிக் கிழமை 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது ” என்றார் .
ஆரி தன் பேச்சில் ,
” தமிழ் நாட்டில் தலை நகரின் விமான நிலையத்தில் தமிழுக்கு இடம் இல்லை என்பது பெரிய கொடுமை .
இந்தியாவிலேயே ஒழுங்கா வரி கட்டுபவன் தமிழன்தான் .
நாங்க எல்லாம் வரி கட்ட மறுத்தா அப்புறம் விளைவுகள் விபரீதம் ஆகும் கவனம் ” என்று நெருப்பாக ஆரம்பித்து , தொடர்ந்து ,
” இந்தப் படத்தின் போது என் அம்மாவை நான் இழந்தேன் . அதை மறக்க முடியாது . ஆனால் அதைக் கூட நான் விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டதாக திரித்து எழுதினார்கள் .
அது மனசுக்கு கஷ்டமாக இருந்தது . நான் ஒன்றும் அப்படி தரங் கெட்டவன் அல்ல .
நாகேஷ் திரையரங்கம் படத்தில் நல்ல கதை , சமூக அக்கறை விஷயம் , காதல் , பேய் எல்லாம் இருக்கிறது . எல்லோரையும் கவரும் படமாக நிச்சயம் இருக்கும் ” என்றார் .
வரும் வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 16 அன்று திரைக்கு வருகிறது நாகேஷ் திரையரங்கம்!






