எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள நான்காவது படம் ’பாக்கணும் போல இருக்கு’.
கதாநாயகனாக பரதன் –கதாநாயகியாக அன்சிபா நடித்துள்ளனர். சூரி, கஞ்சா கறுப்பு, ப்ளாக் பாண்டி, சிங்கப்பூர் துரைராஜ், முத்துக்காளை, விஜய் ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பூஜா என்ற மும்பை மாடல் செம குத்தாட்டம் போட்டுள்ளார். தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் போலீஸ் அதிகாரியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி எஸ்.பி.ராஜகுமார் இயக்கியுள்ளார்.
கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடித்த படங்களில், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற பல நகைச்சுவைக் காட்சிகளை எழுதிய இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார், இந்தப் படத்தில் நடிகர் சூரிக்கு நகைச்சுவை வசனங்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கதையும் சூரியின் காமெடிக் காட்சிகளும் ரொம்ப சிறப்பாக வந்திருப்பதால் படம் மக்களை நிச்சயம் கவரும், என்று தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்
முழுக்க முழுக்க நகைச்சுவைக் கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் வரும் “ரெட்டசடை கூப்பிடுது முத்தம்மா” என்ற பாடல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இப்போதே ஒலித்துக் கொண்டுள்ளது .
அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு அல்லக்கை வேலை பார்க்கும் போலி ஜீவகாருண்ய புண்ணாக்குகள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையும் செய்துள்ள நிலையில் ,
இந்தப் படத்துக்காக சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறை என்ற கிராமத்தில் முறையாக அனுமதி பெற்று, நிஜ ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்தியுள்ளார் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர். அதுமட்டும் இன்றி பங்கேற்ற ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், முரட்டுக் காளைகளுக்கும் பரிசுகளும் கொடுத்து கௌரவித்துள்ளார்.
பாடல்கள், காமெடி என முழுக்க முழுக்க ஒரு நூறு சதவீத பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் ‘பாக்கணும் போல இருக்கு’ பிப்ரவரி மாதம் வெளியாகிறது.