எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ பார்த்திபன் காதல் “
இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி. DF Tech
இசை – பில்லா
பாடல்கள் – யுகபாரதி
எடிட்டிங் – ஸ்ரீகாந்த் NB
கலை – S.M.சரவணன்
ஸ்டன்ட் – மகேஷ்
நடனம் – விஜிசதீஷ்
புகைப்பட கலை – ஜோஷ்வா
தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
திரைக்கதை, வசனம் – S.குமரேசன் – ஜோ ஜார்ஜ்
கதை, இயக்கம் – வள்ளிமுத்து ( இவர் ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரித்த என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய,
P.ராஜபாண்டியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் )
படத்தின் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய திரைக்கதை வசனகர்த்தாக்களான
S.குமரேசன் – ஜோ ஜார்ஜ் இருவரும்
“படம் மிக யதார்த்தமான கதைக் களத்தில் மிக வித்தியாசமான நிகழ்வுகளோடு இருக்கும் . எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள்.
ஆனால் நாங்கள் உண்மையாகவே சொல்கிறோம் ”என்றனர் .
நாயகி வர்ஷிதா தனது பேச்சில், ” நான் பெங்களூர் பொண்ணு . இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதில் மிகுந்த சந்தோசம் .
இயக்குனர் சொன்ன கதை பிரம்மாதமாக இருந்தது ” என்றார் .
நாயகன் யோகி பேசும்போது, ” பல வருடங்களாக நான் இயக்குனரிடம் வாய்ப்புக் கேட்டு வந்தேன் . திடீர் என ஒரு நாள் சென்னைக்கு வர சொன்னார் . எதாவது கேரக்டர் உறுதி என்ற நம்பிக்கையில் வந்தேன் .
என்னிடம் முழு கதையும் சொன்னார் . எனக்கு எதற்கு இதை எல்லாம் சொல்கிறார்என்று நினைத்தேன் . அப்புறம்தான் நீதான் படத்தின் ஹீரோ என்றார் .
பிறகும் கூட தயாரிப்பாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டபோது, நான் ஹீரோ என்பதில் உறுதியாக இருந்து அவர்களை சம்மதிக்க வைத்தார் ” என்றார்
இயக்குனர் வள்ளிமுத்து தன் பேச்சில் , “படம் பற்றிய முதல் நிகழ்வு பத்திரிக்கையாளர்கள் முன்புதான் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து , இன்று உங்கள் முன்னாள் முதல் தோற்றத்தை வெளியிட்டு இருக்கிறேன் .
இது வெற்றிப் படமாக ஆகி, நாம் இப்படி மீண்டும் சந்தித்து வெற்றி விழாவில் பேசும் வரை எனக்கு உங்கள் ஆதரவு வேண்டும்
கோவில்பட்டி பக்கதம் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது இந்தப் படம் .
யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.
சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடிப்பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் இந்த ‘ பார்த்திபன் காதல்’ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது.
கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது “என்றார்.
வெற்றி பெற வாழ்த்துகள் !
