
மம்பட்டியான் தியாகராஜன் தயாரிக்க அவரது மகன் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க அருண் ராஜ் வர்மா என்ற புது இயக்குனர் அறிமுகமாகும் படம் சாஹசம் .
இந்தப் படத்துக்காக தமன் இசையில் மதன் கார்க்கி எழுதிய ‘காரத்தில் இவ சில்லி” என்ற பாடலை டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரத்தின் நடன இயக்கத்தில், ரயில்வே ஸ்டேஷன்… அதில் நிற்கும் ரயில் உள்பட….. பிரம்மாண்டமான நடன அரங்கை செட் போட்டு, வெள்ளை வெளேர் ரஷ்ய அழகிகள் விளக்கு வெளிச்சத்தில் டாலடித்துக் கொண்டு ஆட, உற்சாகமாகப் படமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தப் பாடலில் நாயகன் பிரஷாந்துடன் ஆடும் நர்கீஸ் ஃபக்ரி இந்தி சினிமாவின் ஹாட்டான ஐட்டம் சாங் நடிகை. மற்றும் கதாநாயகி.
பாகிஸ்தானி அப்பாவுக்கும் செக் நாட்டு அம்மாவுக்கும் நியூயார்க்கில் குவீன்ஸ் பகுதியில் பிறந்த இந்த வெள்ளை நிற வாளை மீன் . அமெரிக்காவின் டாப் மாடல் சைக்கிள் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாகி, ரன்பீர் கபூர் ஜோடியாக ராக் ஸ்டார் என்ற இந்திப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, அப்புறம் மெட்ராஸ் கபே படத்தில் ஜான் ஆபிரகாமுக்கு ஜோடியாக நடித்து, அதன்பிறகு ஷாஹித் கபூர் நடித்த பட்டா போஸ்டர் நிக்லா ஹீரோ படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஆரம்பித்தார். வருண் தவான் நடித்ஹா மெயின் தேரா ஹீரோ படத்தில் இவரும் ஒரு ஹீரோயின் .

சல்மான் கான் நடித்து ரம்ஜான் அன்று வெளிவந்துள்ள கிக் படத்தில் இவர் மீண்டும் ஐட்டம் சாங்குக்கு குத்தாட்டம் போட, இந்த பாடலைப் பார்க்கவே தியேட்டரை மொய்க்கிறார்கள் இளசுகள் .
இப்போது ஸ்பை என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வரும் இந்த நர்கீஸ் ஃபக்ரியைதான் , சாஹசம் படத்தில் குத்தாட்டம் போடக் கொண்டு வந்து குதூகலித்துக் கிடக்கிறார்கள் தியாகராஜனும் பிரஷாந்தும்.
மேற்படி பாடலுக்கென்றே விசேஷமான லைட்டுகளை கொண்டு வந்து படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். (கண்டம் கடந்து வந்த கன்னிகள் தெரிந்த கண்ணுக்கு கலர் கலரான லைட்டெல்லாம் எங்கே தெரியுது )


“நர்கீஸ் பக்ரி அற்புதமான நடிகை . பிரம்மாதமாக நடனம் ஆடுகிறார். என்னோடு இணைந்து நடித்த ஐஸ்வர்யா ராய் மாதிரி பிரபலங்களை போல இவரும் விசேஷமானவர்” என்று சந்தோஷமாய் சர்டிபிகேட் கொடுக்கிறார் பிரசாந்த் .
நர்கீஸ் பக்ரி என்ன சொல்கிறார்? “தென்னிந்திய சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு பல நாள் ஆசை . அது தமிழ்ப் படத்தில் நடிப்பதன் மூலம் நிறைவேறுவதில் சந்தோசம் . எனக்கு சென்னை ரொம்ப புடிக்குது . சென்னை சாப்பாடு ரொம்ப புடிக்குது. பிரசாந்த் தியாகராஜன் இருவரும் இனிமையான மனிதர்கள். இந்த பாட்டு சூப்பரா இருக்கு ஆனா இதுதான் நான் ஆடும் கடைசி ஐட்டம் சாங் . இனிமே கதாநாயகியாதான் நடிப்பேன் . தமிழ் சினிமாவில் டிரடிஷனல் கதாநாயகியா நடிக்க ஆவலா இருக்கேன் ” என்றார் .
‘என்ன பாவம் பண்ணினோமோ தெரியல .. இந்த ஊருக்கு வந்தாத்தான் எல்லாருக்கும் இழுத்துப் போர்த்தி நடிக்கற எண்ணமே வருது’ என்று நொந்துகொண்டே பிரஷாந்தை ஓரம் கட்டி “போன வருஷம் இந்த நர்கீஸ் ஃபக்ரிக்கு ஏதோ, ‘டீச்சர்ஸ் யங் அச்சீவர்ஸ் அவார்ட்’ னு விருது கொடுத்தாங்களாமே .. பாப்பா சின்ன வயசுல படிப்புல ரொம்ப கேட்டியோ…” என்று கேட்டு முடிப்பதற்குள் விழுந்து விழுந்து சிரித்த பிரஷாந்த், “ஹையோ.. ஹையோ… டீச்சர்ஸ் என்பது ஒரு மதுபானக் கம்பெனியின் பேருங்க …” என்றார் .
டீச்சர்னு கூடவா சரக்குக்கு பேரு வைப்பாங்க என்ற ஆச்சர்யம் வந்தாலும் .. ஒண்ணு மட்டும் உறுதி .
சரக்கு கம்பெனியின் இளம் சாதனையாளர் விருதை வாங்க நர்கீஸ் ஃபக்ரிக்கு நானாவித தகுதியும் இருக்குங்கோவ்!.
Comments are closed.